‘எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்யுங்கள்’
1. ராஜ்ய பிரஸ்தாபிகள் மற்றவர்களுக்காக என்ன செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள், ஏன்?
1 மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் உணர்ந்தார். (1 கொ. 9:16, 19, 23) அவரைப் போலவே நமக்கும் மக்களுடைய நலனில் அக்கறை இருப்பதால் அவர்களிடம் நற்செய்தியை அறிவிப்பதற்கு ஊக்கமான முயற்சி எடுக்கிறோம்.
2. பிரசங்க வேலையில் ஈடுபடும்போது என்ன மாற்றங்களைச் செய்ய நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோம், ஏன்?
2 மக்கள் எங்கே எப்போது இருக்கிறார்களோ அங்கே அப்போது பிரசங்கியுங்கள்: மீன்கள் பெரும்பாலும் எங்கே கிடைக்குமோ அங்கேதான் திறம்பட்ட மீனவன் வலையை வீசுவான்; அதோடு, அவை எப்போது அதிகமாகக் கிடைக்குமோ அப்போதுதான் வலையை வீசுவான். ‘மனுஷரைப் பிடிக்கிறவர்களான’ நாமும்கூட, “சகலவிதமான மீன்களையும்” சேகரிக்கிற விசேஷ வேலையில் அதிக திருப்தியடைவதற்கு, தனிப்பட்ட விதத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். (மத். 4:19; 13:47) இதற்காக, சாயங்காலத்தில் வீட்டுக்கு வீடு ஊழியமும், காலையில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிற வேலையும் செய்யலாம், அல்லவா? அப்படிச் செய்யும்போதுதான் நம்முடைய பிராந்தியத்தில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேச முடியும். ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுப்பதே’ பவுலுடைய குறிக்கோளாக இருந்தது; அந்தக் குறிக்கோளை எட்டுவதற்காக அவர் தக்க சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டார்.—அப். 17:17; 20:20, 24; NW.
3, 4. ஊழியத்தின்போது, எந்தெந்த வழிகளில் நாம் மாற்றங்களைச் செய்யலாம், அதனால் என்ன பலன்கள் விளையலாம்?
3 மக்களுடைய தேவைக்கேற்ப பிரசங்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்: மீனவர்கள், குறிப்பிட்ட ஒரு வகை மீனைப் பிடிப்பதற்காக மீன்பிடிக்கும் விதத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். அப்படியானால், நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் நாம் எப்படி ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கலாம்? பொதுவாக அவர்களுக்கு அக்கறையூட்டுகிற ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நாசூக்காகப் பேச ஆரம்பிக்க வேண்டும், பின்பு அதைக் குறித்து அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். (யாக். 1:19) ஒரு விஷயத்தின் பேரில் அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டு அவர்களைப் பேச வைக்க வேண்டும். (நீதி. 20:5) இப்படிச் செய்யும்போது, நம்முடைய பிரசங்கத்தை மக்களுடைய தேவைக்கேற்ப மாற்றியமைத்து அவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் நற்செய்தியை அறிவிக்க முடியும். நம்முடைய அறிமுக வார்த்தைகளைக் கேட்டவுடன் வீட்டுக்காரர் கோபப்படுகிறார் என்றோ, எரிச்சலடைகிறார் என்றோ நாம் உணர்ந்தால், கனிவோடு நம் உரையாடலை நிறுத்திவிட்டு உடனடியாகக் கிளம்பிவிடுவது நல்லது. பவுல் ‘எல்லாருக்கும் எல்லாமானார்.’ (1 கொ. 9:22) ஆக, மக்களுடைய இருதயத்தைச் சென்றெட்ட வேண்டுமானால், சூழ்நிலைக்கேற்ப பிரசங்கத்தை மாற்றிக்கொள்வது அவசியம்.
4 ‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை’ மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான வேலை! (ஏசா. 52:7, NW) ஆகையால், ‘எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்வதன்’ மூலம் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அந்தச் செய்தியைச் சொல்வோமாக.—1 கொ. 9:23.