நாம் எல்லாச் சமயங்களிலும் சாட்சிகளே
1. கிணற்றின் பக்கம் வந்த பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுத்த பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
1 இயேசு மணிக்கணக்காக நடந்துகொண்டிருந்தார். அவர் களைப்பாகவும் பசியாகவும் இருந்தார். அவருடைய சீடர்கள் உணவு வாங்கி வரப் போயிருந்த சமயத்தில், சற்று ஓய்வெடுப்பதற்காக சமாரிய நகரத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றின் பக்கத்தில் அவர் உட்கார்ந்தார். பிரசங்கிப்பதற்காக அவர் சமாரியாவுக்கு வரவில்லை; ஆனால், கலிலேயாவில் தொடர்ந்து ஊழியம் செய்வதற்கு அந்த வழியாக அவர் போக வேண்டியிருந்தது. இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தண்ணீர் எடுக்க வந்த பெண்ணிடம் சாட்சி கொடுத்தார். (யோவா. 4:5-14) ஏன்? இயேசு எப்போதுமே யெகோவாவுக்கு, “உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சியாக” இருந்தார். (வெளி. 3:14) இயேசுவைப் போலவே நாமும் எல்லாச் சமயத்திலும் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்.—1 பே. 2:21.
2. நாம் எவ்வாறு சந்தர்ப்ப சாட்சி கொடுக்கத் தயாராய் இருக்கலாம்?
2 தயாராய் இருங்கள்: பிரசுரங்களை எடுத்துச் செல்வதன் மூலம் சந்தர்ப்பச் சாட்சி கொடுக்க நாம் தயாராய் இருக்கலாம். அநேக பிரஸ்தாபிகள், துண்டுப்பிரதிகளையோ பொருத்தமான பத்திரிகைகளையோ எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்; அவற்றை, நாள் முழுவதும் தாங்கள் சந்திக்கிற கடைக்காரர்களிடமும், பெட்ரோல் நிலைய பணியாளர்களிடமும், மற்றவர்களிடம் கொடுக்கிறார்கள். (பிர. 11:6) எனினும், நம்முடைய பிராந்தியத்தில் எதிர்ப்பு வருமென தெரிந்தால், உண்மையான ஆர்வம் காட்டுபவர்களுக்கு மட்டுமே நம்முடைய பிரசுரங்களை அளிக்க கவனமாய் இருப்பது அவசியம்.
3. நாம் எப்படி உரையாடலைத் துவங்கலாம்?
3 உரையாடலைத் துவங்குங்கள்: சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது, ஆரம்பத்திலேயே பைபிள் விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. இயேசு அந்தக் கிணற்றின் பக்கம் வந்த பெண்ணிடம் தம்மை மேசியா என அறிமுகப்படுத்திக்கொண்டு, உரையாடலைத் துவங்கவில்லை. அவர் தாகத்திற்குத் தண்ணீர் மட்டுமே கேட்டு, அவளுடைய ஆர்வத்தைத் தூண்டினார். (யோவா. 4:7-9) அதே போன்ற அணுகுமுறையைப் பயன்படுத்துவது தனக்கு உதவியாய் இருப்பதாக ஒரு சகோதரி சொன்னார். ‘பண்டிகையைச் சந்தோஷமாகக் கொண்டாடினீர்களா?’ என்று அவரிடம் யாராவது கேட்டால், தான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் அந்தப் பண்டிகையைக் கொண்டாடவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக, “அதைக் கொண்டாட வேண்டாமென நானே முடிவு செய்தேன்” என்று சொல்கிறார். ஆர்வத்துடன் கேள்வி கேட்பவர்கள் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும்போது அந்தச் சகோதரி சாட்சி கொடுக்கிறார்.
4. மத்தேயு 28:18-20 நமக்கு ஏன் தூண்டுதலை அளிக்கிறது?
4 இயேசு பூமியில் பக்திவைராக்கியத்தோடு ஊழியத்தைச் செய்து முடித்தபோதிலும், அவர் செய்ததைப் போலவே இன்று செய்யப்படுகிற ஊழியத்தின் மீது தொடர்ந்து அதிக அக்கறை காட்டுகிறார். (மத். 28:18-20) எனவே, நமக்கு முன்மாதிரியாய் விளக்கும் இயேசுவைப் போலவே, சாட்சிகளாகிய நாம் எல்லாச் சமயத்திலும் நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் அறிவிக்கத் தயாராய் இருக்கிறோம்.—எபி. 10:23.