உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/11 பக். 7
  • என்ன நிலையில் இருக்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்ன நிலையில் இருக்கிறது?
  • நம் ராஜ்ய ஊழியம்—2011
  • இதே தகவல்
  • நம்முடைய பிரசுரங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • பல மொழி பிராந்தியத்தில் பிரசுரங்களை அளித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—2003
  • நம் பைபிள் பிரசுரங்களை ஞானமாக உபயோகியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2011
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2011
km 10/11 பக். 7

என்ன நிலையில் இருக்கிறது?

எது? நாம் ஊழியத்திற்கு எடுத்துச் செல்லும் பிரசுரங்கள்தான். இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வது ரொம்ப முக்கியம். பிரசுரங்கள் பழுப்பாகியிருந்தால், அழுக்காகியிருந்தால், கிழிந்திருந்தால், அதன் ஓரங்கள் மடங்கியிருந்தால் வீட்டுக்காரர் நம் அமைப்பைப் பற்றி என்ன நினைப்பார்? அதோடு, நம்முடைய பிரசுரங்களில் உள்ள உயிர்காக்கும் அருமையான செய்தியை அற்பமாக நினைப்பார், அல்லவா?

பிரசுரங்களை நாம் எப்படிக் கசங்காமல் வைத்துக்கொள்ளலாம்? அநேகர், ஊழியத்திற்கு எடுத்துச் செல்லும் பையில் பிரசுரங்களை நன்கு அடுக்கி வைக்கிறார்கள். உதாரணத்திற்கு, புத்தகங்கள் ஒருபக்கம், பத்திரிகைகள் சிற்றேடுகள் ஒருபக்கம், துண்டுப்பிரதிகள் ஒருபக்கம் என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்கிறார்கள். அதோடு, பைபிளையும் மற்ற பிரசுரங்களையும் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் வைக்கும்போதும் அவை கசங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். இன்னும் சில பிரஸ்தாபிகள், பிரசுரங்களை ‘ஃபோல்டர்களில்’ அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைக்கிறார்கள். நாம் பிரசுரங்களை எந்த முறையில் வைத்திருந்தாலும் சரி, அதைக் கசங்காமல் வைத்திருப்பதுதான் முக்கியம். நம்முடைய பிரசுரங்களைப் பார்த்து நம்முடைய ஊழியத்தை யாரும் குறை சொல்ல வாய்ப்பளிக்கக் கூடாது.—2 கொ. 6:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்