மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்
1. அடுத்த ஊழிய ஆண்டிற்கான ஒரு நாள் விசேஷ மாநாட்டின் தலைப்பு என்ன, அதன் நோக்கம் என்ன?
1 மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படும் சூழ்நிலைகளுக்கு ஒவ்வொரு நாளும் நாம் ஆளாகிறோம். இதை மனதில் கொண்டு 2013-ஆம் ஊழிய ஆண்டிற்கான ஒரு நாள் விசேஷ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 1, 2012 முதற்கொண்டு ‘மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும். (1 தீ. 1:19) படைப்பாளரிடமிருந்து பெற்றிருக்கும் மாபெரும் பரிசான மனசாட்சியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதற்கு கூர்ந்த கவனம் செலுத்த இந்த மாநாடு உதவும்.
2. மாநாட்டில் என்ன முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்?
2 மாநாட்டில் பதிலளிக்கப்படும் கேள்விகள்: மனசாட்சி பற்றிய ஏழு முக்கியமான கேள்விகளுக்கான பதில் மாநாட்டில் விளக்கப்படும்:
• மனசாட்சிக்கு ஆபத்து விளைவிப்பவை எவை?
• நம் மனசாட்சியை பயிற்றுவிப்பது எப்படி?
• எல்லா மனிதர்களுடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருப்பது எப்படி?
• பைபிள் நியதிகளுக்கு இசைவாக யோசித்து செயல்படுவது நம்மைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?
• மற்றவர்களுடைய மனசாட்சியை புண்படுத்தாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
• இணங்கி செல்ல அழுத்தம் வந்தால் இளைஞர்கள் எப்படி அதை சமாளிக்க வேண்டும்?
• கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படும் மனசாட்சியின்படி நடப்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை?
3. மாநாட்டிலிருந்து எவ்வாறு நன்மையடையலாம்?
3 நம் மனசாட்சியைக் கெடுக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளை யெகோவாவின் உதவியோடு நம்மால் சமாளிக்க முடியும். நம் பரலோகத் தகப்பன், அவருடைய வார்த்தை மூலமாகவும் அமைப்பு மூலமாகவும் “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சொல்கிறார். (ஏசா. 30:21) இந்த மாநாடும் அதில் ஒன்று. எனவே, முழு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளத் திட்டமிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கற்றுக்கொண்டவற்றை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என சிந்தியுங்கள். குடும்பமாகக் கலந்து பேசுங்கள். இப்படிச் செய்தால் தொடர்ந்து ‘நல்மனசாட்சி உள்ளவர்களாக இருக்க’ முடியும். சாத்தானின் உலகம் தரும் தற்காலிக இன்பங்களால் பாதை மாறாமலும் இருக்க முடியும்.—1 பே. 3:16.