நீங்கள் துணை பயனியர் செய்வீர்களா?
1. ஊழியத்தில் அதிகமாக ஈடுபட நினைவுநாள் அனுசரிப்புக் காலம் ஏன் சிறந்த காலம்?
1 ஊழியத்தில் அதிகமாக ஈடுபட நினைவுநாள் அனுசரிப்புக் காலம் சிறந்த காலம். யெகோவா தம்முடைய மகனை மீட்பு விலையாகக் கொடுத்து நம்மீது காட்டிய மாபெரும் அன்பைச் சிந்தித்துப் பார்ப்பதற்கான காலம். (யோவா. 3:16) அப்படிச் சிந்தித்தால், நம் இருதயத்தில் நன்றி பொங்கும்; யெகோவாவைப் பற்றியும் மனிதகுலத்துக்காக அவர் செய்து வருகிறவற்றைப் பற்றியும் சொல்லவேண்டுமென்ற ஆசை அதிகமாகும். (ஏசா. 12:4, 5; லூக். 6:45) நமக்குத் தெரிந்தவர்களுக்கும் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கும் இந்த விசேஷ காலத்தில் நினைவுநாள் அழைப்பிதழ்களை விநியோகிக்கிறோம். பின்பு, அதில் கலந்துகொண்டவர்களுடைய ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி செய்கிறோம். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துணை பயனியர் செய்வதன் மூலம் ஊழியத்தில் நீங்கள் அதிகமாக ஈடுபடுவீர்களா?
2. மார்ச் மாதம் துணை பயனியர் செய்ய ஏன் ஏற்ற மாதம்?
2 மார்ச் மாதத்தை விசேஷ மாதமாக்குங்கள்: துணை பயனியர் செய்ய குறிப்பாக மார்ச் மாதம் ஏற்ற மாதம். அந்த மாதத்தில் துணை பயனியர் செய்பவர்கள் 30 மணிநேரமோ 50 மணிநேரமோ ஊழியம் செய்யலாம். வட்டாரக் கண்காணி மார்ச் மாதத்தில் சபையைச் சந்திக்க வந்தால், ஒழுங்கான மற்றும் விசேஷ பயனியர்களுடன் அவர் நடத்துகிற முழு கூட்டத்திலும் துணை பயனியர்கள் கலந்துகொள்ளலாம். மார்ச் 26, 2013, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிற நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழ்களை விநியோகிக்கும் காலப்பகுதி கடந்த வருடங்களைவிட இந்த வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது; அது மார்ச 1 அன்று தொடங்கும். மார்ச் மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறு உள்ளன. எனவே, மார்ச் மாதம் உங்களுக்கு விசேஷ மாதமாக இருக்க துணை பயனியர் செய்ய முடியுமா என யோசித்துப் பாருங்களேன்.
3. ஊழியத்தில் அதிகமாக ஈடுபட நாம் என்னென்ன செய்யலாம்?
3 இப்போதே திட்டமிடுங்கள்: பயனியர் செய்வதற்கு உங்கள் அன்றாட வேலைகளில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டுமென இப்போதே சீர்தூக்கிப் பாருங்கள். இந்த விஷயத்தில் குடும்ப அங்கத்தினர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். எனவே, உங்கள் குடும்பத்தாரின் இலக்குகளைப் பற்றி கலந்துபேசி ஓர் அட்டவணையைத் தயாரிக்க குடும்ப வழிபாட்டில் நேரம் ஒதுக்குங்கள். (நீதி. 15:22) உங்களால் துணை பயனியர் செய்ய முடியாவிட்டால், சோர்ந்துவிடாதீர்கள். நீங்கள் ஊழியத்திற்குப் போகும் நாட்களில், அதிக மணிநேரம் செலவிடுவதற்காக உங்கள் அட்டவணையை மாற்றியமைக்க முடியுமா? வாரத்தில் இன்னும் ஒரு நாள் ஊழியத்திற்குப் போக முடியுமா?
4. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக ஊழியம் செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கும்?
4 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக ஊழியத்தில் ஈடுபடும்போது யெகோவாவுக்குச் சேவை செய்வதிலும் மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் நமக்கு அளவில்லா சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும். (யோவா. 4:34; அப். 20:35) மிக முக்கியமாக, நாம் செய்யும் தியாகங்கள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும்.—நீதி. 27:11.