உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/13 பக். 2-3
  • அவர்களை வரவேற்றிடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவர்களை வரவேற்றிடுங்கள்!
  • நம் ராஜ்ய ஊழியம்—2013
  • இதே தகவல்
  • வலிமையான சாட்சி கொடுக்கப்படும்
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களுக்கு எப்படி உதவலாம்?
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • நினைவு ஆசரிப்பில் வரவேற்கப்படுகிறவர்களாய் அவர்களை உணரச்செய்யுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2013
km 3/13 பக். 2-3

அவர்களை வரவேற்றிடுங்கள்!

1. சாட்சி கொடுக்க எந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த வாய்ப்பளிக்கிறது, ஏன்?

1 நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, சாட்சி கொடுக்க மிகச் சிறந்த வாய்ப்பளிக்கிற நிகழ்ச்சி! இந்த வருட நினைவுநாள் அனுசரிப்புக்கு ஒரு கோடிக்கும் அதிகமான புதியவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீட்புபலியின் மூலம் மாபெரும் விதத்தில் அன்பை வெளிக்காட்டிய இருவரைப் பற்றி அங்கு கொடுக்கப்படுகிற பேச்சில் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். (யோவா. 3:16; 15:13) யெகோவா கொடுத்த பரிசின் மூலமாக அவர்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வார்கள். (ஏசா. 65:21-23) என்றாலும், அவர்களுக்குச் சாட்சி கொடுக்கிற வாய்ப்பு பேச்சு கொடுக்கும் சகோதரருக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே கிடைக்கும். ஆம், புதியவர்களை அன்போடு வரவேற்பதன் மூலம் வலிமைமிக்க விதத்தில் சாட்சி கொடுக்க நம் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கும்.—ரோ. 15:7, அடிக்குறிப்பு.

2. புதியவர்களை நாம் எப்படி அன்புடன் வரவேற்கலாம்?

2 நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குமுன் வெறுமனே உங்கள் இருக்கையில் போய் அமைதியாக அமர்ந்துகொள்வதற்குப் பதிலாக, உங்கள் அருகில் இருப்பவர்களிடம் ஏன் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது? அங்கு வரும் புதியவர்களுக்குச் சற்று பயமாகவும் கூச்சமாகவும் இருக்கலாம், நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகிறது எனத் தெரியாமல் பதட்டமாக இருக்கலாம். எனவே, நாம் அன்பாக, சிநேகப்பான்மையாக அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கும்போது அவர்களுக்குப் பயமெல்லாம் போய் சகஜமாகிவிடுவார்கள். வந்திருக்கும் புதியவர்களிடம், ‘இப்போதுதான் முதல் முறையாக எங்கள் கூட்டத்திற்கு வருகிறீர்களா?’ என்றோ ‘சபையில் உங்களுக்கு யாரையாவது தெரியுமா?’ என்றோ கேட்டீர்களென்றால், அவர்களுக்கு எப்படி அழைப்பிதழ் கிடைத்தது எனத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அவரை உங்கள் பக்கத்தில் அமரும்படி நீங்கள் சொல்லலாம், உங்கள் பைபிளையும் பாட்டுப் புத்தகத்தையும் அவருக்குக் காண்பிக்கலாம். நிகழ்ச்சி ஒருவேளை ராஜ்ய மன்றத்தில் நடைபெற்றால், ராஜ்ய மன்றத்தை அவருக்குக் கொஞ்சம் சுற்றிக் காட்டலாம். பேச்சு முடிந்த பிறகு, அவருக்கு ஏதாவது கேள்வி இருந்தால் பதிலளிப்பதாகச் சொல்லுங்கள். ஒருவேளை நிகழ்ச்சி முடிந்ததும் வேறொரு சபை நினைவுநாள் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் அவர்களுக்கு இடமளிக்க சீக்கிரமாக அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும். அதனால் அவரிடம், ‘இந்த நிகழ்ச்சியைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மறுபடியும் உங்களை எப்போது சந்திக்கலாம்?’ என்று கேளுங்கள். பிறகு, அவரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். மூப்பர்கள் முக்கியமாக, அங்கு வருகிற செயலற்ற பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்த விழிப்பாய் இருக்க வேண்டும்.

3. நினைவுநாளுக்கு வரும் புதியவர்களை வரவேற்க நாம் முயற்சியெடுப்பது ஏன் முக்கியம்?

3 அங்கு வரும் புதியவர்களில் ஏராளமானோர், யெகோவாவின் மக்களிடையே நிலவுகிற சந்தோஷத்தையும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் முதன்முதலாகப் பார்க்கப்போகிறார்கள். (சங். 29:11; ஏசா. 11:6-9; 65:13, 14) நினைவுநாள் நிகழ்ச்சி முடிந்து வீடுதிரும்பும்போது எது அவர்களுடைய நினைவில் நிற்கும்? அவர்களை வரவேற்க நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொறுத்தே இதற்குப் பதிலளிக்க முடியும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்