ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... ஆர்வமுள்ளவர்களைப்பற்றி எழுதிவையுங்கள்
“உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து.” (1 தீ. 4:16) தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த ஆலோசனை நம் எல்லோருக்கும் பொருந்தும். புதியவர்களோ, அனுபவமுள்ளவர்களோ நாம் எல்லோரும் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நமக்குக் கைகொடுப்பதற்காக “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட...” என்ற தொடர் கட்டுரை நம் ராஜ்ய ஊழியத்தில் அறிமுகமாகிறது. ஒவ்வொரு கட்டுரையும் திறமையாக ஊழியம் செய்ய உதவும் ஒரு முக்கிய விஷயத்தை விளக்கும்; அது சம்பந்தமாக, சில ஆலோசனைகளையும் அளிக்கும். அந்த மாதம் ஊழியத்தில் நாம் அதைச் செய்து பார்க்கப்போகிறோம். ஒரு மாதத்திற்குப் பிறகு, நாம் பெற்ற பலன்களை ஊழியக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்வோம். இந்த மாதம் என்ன கற்றுக்கொள்ளப்போகிறோம்? ஆர்வமுள்ளவர்களைப்பற்றி எழுதிவைப்பது.
ஏன் முக்கியம்? பிரசங்கிப்பது மட்டுமே நம் ஊழியத்தை முழுமையாக்கிவிடாது. ஆர்வம் காட்டுகிறவர்களை மறுபடியும் சந்தித்து, கற்பிக்க வேண்டும். அதாவது, நாம் போட்ட விதைகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். (மத். 28:19, 20; 1 கொ. 3:6-9) அதற்கு, அந்த நபரை மீண்டும் சந்தித்து, அவருடைய பிரச்சினைகளை, தேவைகளைக் குறித்துப் பேசி, ஏற்கெனவே நாம் பேசிய விஷயங்களைப்பற்றி கூடுதல் தகவல் அளிக்க வேண்டும். ஆகவே, ஆர்வமுள்ளவர்களைப் பற்றிய தகவலை கண்டிப்பாக எழுதிவைக்க வேண்டும்.
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
என்ன எழுதுகிறீர்கள் என்பதை உங்களுடன் ஊழியம் செய்பவரிடமும் சொல்லுங்கள்.