பழைய பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்
பழைய பத்திரிகைகளை அப்படியே வைத்திருந்தால் அல்லது தூக்கிப் போட்டால் யாருக்குமே பிரயோஜனமில்லை. அதனால், ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு அதைக் கொடுக்கலாம். ஒரு பத்திரிகையாவது, படிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, யெகோவாவை கடவுளாக ஏற்றுக்கொள்ள வழிசெய்யலாம். (ரோ. 10:13, 14) பழைய பத்திரிகைகளைப் பயன்படுத்த இதோ சில வழிகள்:
அடிக்கடி ஊழியம் செய்யப்படாத இடங்களில், பூட்டப்பட்ட வீடுகளைப் பார்த்தால் பத்திரிகையை யார் கண்ணிலும்படாமல் வைத்துவிட்டு வரலாம்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பொது ஊழியம் செய்யும்போது, “பத்திரிகைகளை படிப்பீங்களா?” என்று கேளுங்கள். ஒருசில பழைய பத்திரிகைகளைக் காட்டி, பிடித்ததை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.
உங்கள் பிராந்தியத்திலுள்ள மருத்துவமனை, அழகு நிலையம் போன்ற இடங்களுக்குப் போகும்போது, அங்குள்ள வரவேற்பறையில் பழைய பத்திரிகைகள் சிலவற்றை வைக்கலாம். ஆனால், அனுமதி பெற்று வைப்பது நல்லது. ஏற்கெனவே நம்முடைய பத்திரிகைகள் அங்கு நிறைய இருந்தால், கூடுதலாக வைக்காதீர்கள்.
மறுசந்திப்புக்குத் தயாரிக்கும்போது, அவருக்கு எந்த விஷயங்கள் பிடிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர் குடும்பஸ்தரா? சுற்றுலா பிடிக்குமா? தோட்ட வேலையில் ஆர்வமா? பழைய பத்திரிகைகளைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அவருக்கேற்ற கட்டுரையைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்.
ஆர்வம் காட்டிய ஒருவரை பல முயற்சிகளுக்குப் பிறகு சந்தித்தால், இடையில் எந்தெந்த பத்திரிகைகள் அவருக்குக் கிடைக்கவில்லையோ அவற்றைக் காட்டுங்கள்.