இதோ ஒரு அணுகுமுறை
விழித்தெழு! ஜூலை – செப்டம்பர்
“இன்றைக்கு அதிகமாகிக்கொண்டே வரும் ஒரு பிரச்சினையைப் பற்றி நாங்கள் எல்லோரிடமும் பேசுகிறோம். சிலர், வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்கள், உண்மையிலேயே சாக வேண்டும் என்று நினைத்து அப்படிச் செய்கிறார்களா அல்லது பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்து அப்படிச் செய்கிறார்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] வாழ்க்கையில் நம்பிக்கையோடு இருக்க, கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைய பேருக்கு உதவியிருக்கிறது. அதை உங்களுக்கு வாசித்துக் காட்டலாமா? [வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.] வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கான மூன்று காரணங்களைப் பற்றி இந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதைப் படித்துப் பாருங்கள்.”