ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கோபப்படுகிறவர்களிடம் பொறுமையாக பேசுங்கள்
ஏன் முக்கியம்: நாம் ஊழியத்திற்கு போகும்போது, நிறைய பேர் நாம் சொல்லும் விஷயங்களை பொறுமையாக கேட்கிறார்கள். ஆனால், எல்லாரும் அப்படி கேட்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர், நம்மேல் கோபப்படுவார்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (யோவா. 17:14) அப்படிப்பட்டவர்களிடம் பொறுமையாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளும்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார். (ரோ. 12:17-21; 1 பே. 3:15) பிரச்சினையும் பெரிதாகாமல் இருக்கும். அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் அந்த வீட்டில் இருக்கிறவர்களிடம் பேசும்போது, அவர்கள் பொறுமையாக கேட்க வாய்ப்பு இருக்கிறது. நாம் பொறுமையாக நடந்துகொள்வதை பார்த்து மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள், யெகோவாவையும் புகழ்வார்கள்.—2 கொ. 6:3.
இந்த மாதம் இதை செய்து பாருங்கள்:
இந்த ஆலோசனைகளை எல்லாம் குடும்ப வழிபாட்டில் நடித்து பாருங்கள்.
கோபமாக பேசின ஒருவரிடம் இன்னும் எப்படி நன்றாக பேசியிருக்கலாம் என்று உங்களோடு ஊழியம் செய்கிறவர்களிடம் கேளுங்கள்.