மக்களுக்கு ஏற்ற விதத்தில் பேசுங்கள்
1 ஊழியத்தில் சந்திக்கிற மக்களை நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற வித்தில் பேசுவது ரொம்ப முக்கியம் என்று பவுல் சொன்னார். இன்றுகூட நாம் வித்தியாசமான மக்களை சந்திக்கிறோம். சிலர், மத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்; சிலருக்கு மதம் என்றாலே பிடிக்காது. அதனால் நாம் சொல்லும் செய்தி “எல்லாருக்கும்” பிடித்ததுபோல் இருக்க வேண்டும் என்றால், நாம் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பேசுவது ரொம்ப முக்கியம்.—1 கொ. 9:19-23.
2 ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஆட்களுடைய விருப்பத்துக்கு ஏற்ற வித்தில் பேசுவது ரொம்ப முக்கியம். இதை செய்யும்போதுதான், நாம் அவர்களை புரிந்துகொண்டு பேசுகிறோம் என்று அர்த்தம். இதற்கு நாம் நன்றாக தயாரிக்க வேண்டும். நம்மிடம் நிறைய பிரசுரங்கள் இருக்கிறது, அதில் இருக்கிற எல்லா விஷயங்களையும் நன்றாக தெரிந்து வைத்திருந்தால்தான் யார் யாரிடம் எந்தெந்த விஷயங்களை பேச முடியும் என்று நமக்கு தெரியும். சின்ன பிள்ளைகள், பெரியவர்கள், குடும்ப தலைவர்கள், வீட்டில் இருக்கிற பெண்கள், வேலைக்கு போகும் பெண்கள் என்று எப்படிப்பட்ட ஆட்களை பார்த்தாலும் அவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் பேசி, அவர்களுக்கு ஏற்ற கட்டுரைகளை கொடுக்க முடியும்.
3 ஊழியத்தில், ஒரு நபரிடம் பேசுவதற்கு முன் அவருடைய வீட்டை சுற்றி இருக்கிற விஷயங்களை நன்றாக கவனியுங்கள். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா? வீட்டை அழகாக, சுத்தமாக வைத்திருக்கிறார்களா? என்றெல்லாம் கவனியுங்கள். இப்படி கவனிக்கும்போது, அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பேச முடியும். நல்ல கேள்விகளை யோசித்து அவர்களிடம் கேளுங்கள். அப்படி கேட்டால், அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் என்ன நம்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் பதில் சொல்லும்போது நன்றாக கவனியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு தேவையான விஷயங்களை... பிடித்த விஷயங்களை... பற்றி தொடர்ந்து பேச முடியும்.
4 நாம் ஊழியத்துக்கு நன்றாக தயாரித்து செல்லும்போது... மக்களை நன்றாக புரிந்துகொள்ளும்போது... “எப்படியாவது சிலரையேனும் மீட்புக்கு வழிநடத்த எல்லாருக்கும் எல்லாமானேன்” என்று சொன்ன பவுலை போலவே நாமும் இருப்போம்.—1 கொ. 9:22; நீதி. 19:8.