கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கேமரா அல்லது இன்டர்காம் மூலமாக சாட்சி கொடுப்பது
ஏன் முக்கியம்? தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாலும், குற்றச்செயல்கள் அதிகமாகியிருப்பதாலும் வீடுகளில் பாதுகாப்புக் கேமராக்கள் மற்றும் இன்டர்காம்களைப் பயன்படுத்துவது ரொம்ப சகஜமாகிவிட்டது. இவற்றைப் பயன்படுத்துகிறவர்களிடம் நல்ல செய்தியை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் நமக்கு இருக்கலாம். ஏனென்றால், இந்த விதத்தில் பேசும்போது வீட்டுக்காரரை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், அவரால் நம்மைப் பார்க்க முடியும். இருந்தாலும், தைரியமாக சாட்சிக் கொடுக்க பின்வரும் விஷயங்கள் நமக்கு உதவும்.
இதை எப்படிச் செய்வது?
நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள். கேமரா அல்லது இன்டர்காமைப் பயன்படுத்துகிற நிறைய பேர் நம்மிடம் பேச ஆர்வமாக இருக்கிறார்கள்
சில கேமராக்கள், காலிங் பெல்லை அழுத்துவதற்கு முன்பே நீங்கள் வீட்டு வாசலில் நிற்பதையும் பேசுவதையும் பதிவு செய்ய ஆரம்பித்துவிடும். இதை வீட்டுக்காரரால் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்
இன்டர்காம் வழியாக வீட்டுக்காரர் பேசும்போது நீங்களும் இன்டர்காம் அல்லது கேமரா வழியாக அவரிடம் நேரில் பேசுவதுபோல் பேசுங்கள். சிரித்த முகத்தோடு இயல்பாகப் பேசுங்கள். வீட்டுக்காரரை நேரில் பார்த்துப் பேசுவதற்கு என்ன தயாரித்து வைத்திருந்தீர்களோ அதையே பேசுங்கள். கேமரா முன் பேசும்போது முகத்தை ரொம்பப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசாதீர்கள். பெல்லை அழுத்திய பின் இன்டர்காம் அல்லது கேமரா வழியாக வீட்டுக்காரர் பதிலளிக்கவில்லை என்றால் நீங்கள் எதுவும் பேச வேண்டியதில்லை
நீங்கள் பேசி முடித்த பிறகும்கூட வீட்டுக்காரரால் உங்களைப் பார்க்கவும் நீங்கள் பேசுவதைக் கேட்கவும் முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்