யெகோவாவையும் இயேசுவையும் வைராக்கியமாக பின்பற்றுங்கள்—நினைவுநாள் சமயத்தில்
1. நினைவுநாள் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ன முயற்சி எடுக்கிறார்கள்?
1 யெகோவா தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வைராக்கியமாக வேலை செய்கிறார். தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக மக்களை ஆசீர்வதிப்பதற்கு அவர் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். (ஏசா. 9:7) இயேசுவும், யெகோவாவுடைய வணக்கத்துக்காக நிறைய விஷயங்களை வைராக்கியமாக செய்தார். (யோவா. 2:13-17; 4:34) ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் நினைவுநாள் சமயத்தில் இன்னும் அதிகமாக ஊழியம் செய்கிறார்கள்; அப்படி செய்வதால், யெகோவாவும் இயேசுவும் காட்டிய வைராக்கியத்தை அவர்களும் காட்டுகிறார்கள். நீங்களும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வைராக்கியமாக ஊழியம் செய்வீர்களா?
2. மார்ச் 7-ஆம் தேதியில் இருந்து என்ன செய்ய ஆரம்பிப்போம்?
2 அழைப்பிதழை ஆர்வமாக கொடுங்கள்: மார்ச் 7-ம் தேதியில் இருந்து நாம் அழைப்பிதழை கொடுக்க ஆரம்பிப்போம். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் அதிகமாக ஊழியம் செய்வதற்கு, முன்பே திட்டமிடுங்கள். நினைவுநாள் சமயத்தில், சபையில் இருக்கிற எல்லாரும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்வார்கள். ஊழியம் செய்வதற்காக சபைக்கு கொடுத்த பகுதியை, முடிந்த வரை செய்து முடிப்பார்கள். நீங்களும் உங்களுக்கு தெரிந்த எல்லாருக்கும் இந்த அழைப்பிதழை கொடுங்கள். உங்களோடு பைபிள் படிக்கிறவர்கள், மறு சந்திப்புகள், கூட படிக்கிறவர்கள், வேலை பார்க்கிறவர்கள், சொந்தக்காரர்கள் என்று எல்லாருக்கும் இந்த அழைப்பிதழை கொடுங்கள். நம் வெப்சைட்டை பயன்படுத்திகூட இந்த நிகழ்ச்சிக்கு அவர்களை அழைக்கலாம்.
3. மார்ச்-ஏப்ரல் மாதத்தில் இன்னும் அதிகமாக ஊழியம் செய்வதற்கு என்ன செய்யலாம்?
3 துணை பயனியர் ஊழியம் செய்யுங்கள்: சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால்தான், நம்மால் அதிக மணிநேரம் ஊழியம் செய்ய முடியும். நிறைய பேர் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் துணை பயனியர் ஊழியம் செய்வார்கள். ஏனென்றால், அந்த மாதத்தில் துணை பயனியர்கள் 30 மணிநேரமோ 50 மணிநேரமோ ஊழியம் செய்யலாம். நினைவுநாள் சமயத்தில் இன்னும் அதிகமாக ஊழியம் செய்வதை பற்றி குடும்ப வழிபாட்டில் கலந்துபேசுங்கள், இல்லையென்றால் தனிப்பட்ட படிப்பில் யோசித்து பாருங்கள். யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள். (நீதி. 15:22) நீங்கள் ஆர்வமாக ஊழியம் செய்வதை பார்க்கும்போது மற்றவர்களும் உங்களை போலவே ஊழியம் செய்ய நினைப்பார்கள். உங்கள் சொந்த வேலைகளில் மாற்றம் செய்து ஊழியத்தை அதிகமாக செய்யுங்கள். இப்படி செய்யும்போது இயேசுவை பின்பற்றுவீர்கள்.—மாற். 6:31-34.
4. யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
4 இந்த நினைவுநாள் சமயத்தில் நீங்க யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றும்போது உங்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்களால் நிறைய பேருக்கு நற்செய்தியை சொல்ல முடியும்; யெகோவாவை வணங்குவதாலும், மற்றவர்களுக்காக உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் ‘கொடுப்பதினாலும்’ நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். (அப். 20:35) எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் ஆர்வத்தோடு சேவை செய்வதை பார்த்து யெகோவாவும் இயேசுவும் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.