நற்செயல்கள் செய்ய மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்
“அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக” என்று எபிரெயர் 10:24 சொல்கிறது. நாம் சொல்லும் வார்த்தையின் மூலமாகவும் நடந்துகொள்ளும் விதத்தின் மூலமாகவும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும். நாம் சந்தோஷமாக யெகோவாவுக்கு சேவை செய்வதை பார்த்து மற்றவர்களும் அப்படி சேவை செய்ய நினைப்பார்கள். நமக்கு கிடைத்த நல்ல அனுபவங்களை அவர்களிடம் சொல்வதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள். நீங்கள் யாரை உற்சாகப்படுத்துகிறீர்களோ அவர்களை உங்களுடனோ மற்றவர்களுடனோ ஒப்பிட்டு பேசாதீர்கள். (கலா. 6:4) ‘நம்மளால யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியலயே’ என்று அவர்களை நினைக்க வைக்காதீர்கள். “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும்” மற்றவர்களை தூண்டுகிற மாதிரி பேசுங்கள். (ஊழியப் பள்ளி புத்தகம் பக். 158, பாரா 4-ஐ பாருங்கள்.) இப்படி நாம் மற்றவர்களை அன்பாக உற்சாகப்படுத்தினால், நற்செயல்களை அவர்களாகவே செய்ய ஆரம்பிப்பார்கள். நன்றாக ஊழியம் செய்வதற்கும் மற்றவர்களுக்கு தேவையான உதவியை செய்வதற்கும் தூண்டப்படுவார்கள்.—2 கொ. 1:24.