நினைவு நாளுக்கு நீங்கள் தயாரா?
கி.பி 33, நிசான் 13. நெருங்கிய நண்பர்களோடு இயேசு இருந்த கடைசி சாயங்காலம் அதுதான். அவர்களோடு சேர்ந்து கடைசியாக பஸ்காவை அவர் கொண்டாடினார். அடுத்ததாக எஜமானரின் இரவு விருந்து என்ற புது நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அதை நன்றாக நடத்த சில விஷயங்களை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டியிருந்தது. அதை செய்வதற்காக பேதுருவையும் யோவானையும் அனுப்பினார். (லூக்கா 22:7-13) அந்த வருடத்திற்கு பிறகு, ஒவ்வொரு வருடமும் இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்கள். (லூக்கா 22:19) அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்கிறார்கள். இந்த வருடம் இயேசுவின் நினைவு நாள் ஏப்ரல் 3-ம் தேதி நடக்கும். அதற்காக நாம் எல்லாரும் எப்படி தயாராகலாம்?
பிரஸ்தாபிகள் என்னென்ன செய்ய வேண்டும்?
நினைவு நாள் அழைப்பிதழை முடிந்தளவு நிறைய பேருக்கு கொடுக்க முயற்சி எடுங்கள்.
பைபிள் படிப்புகள், சொந்தக்காரர்கள், கூட படிப்பவர்கள், உங்களோடு வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் எல்லாருடைய பெயரையும் எழுதி வையுங்கள். அவர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழை கொடுங்கள்.
நினைவு நாள் பைபிள் வாசிப்பு பகுதியை படித்து, அதை பற்றி நன்றாக யோசித்து பாருங்கள்.
நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்க முன்கூட்டியே வந்துவிடுங்கள்.