எலிப்பாஸ்:
இவர் ஏதோமிலிருந்த தேமான் என்ற ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். எரேமியா 49:7-ல் தேமான், ஞானத்துக்கு பேர் போன இடமாக சொல்லப்பட்டிருக்கிறது. கல்வியறிவு பெற்ற ஏதோமியர்கள் தேமானில் இருந்தார்கள்
மூன்று பேரில் இவர் மூத்தவராகவும் அதிக செல்வாக்குள்ளவராகவும் இருந்திருக்கலாம். இவர்தான் முதலில் பேசினார். மூன்று தடவை பேசினார். மற்ற இரண்டு பேரைவிட அதிக நேரம் பேசினார்
எலிப்பாசின் குற்றச்சாட்டுகள்:
யோபுவின் உத்தமத்தை கேலி செய்தார். தன்னுடைய ஊழியர்களை கொஞ்சம்கூட கடவுள் நம்புவது இல்லை என்று சொன்னார் (யோபு 4, 5)
யோபுவை, கடவுள் பயம் இல்லாத, திமிர்பிடித்த கெட்ட மனிதன் என்று சொன்னார் (யோபு 15)
யோபுவை பேராசைப் பிடித்தவர், அநியாயக்காரர் என்று சொன்னார். கடவுளுடைய பார்வையில் யோபு ஒன்றுக்கும் உதவாதவர் என்றும் சொன்னார் (யோபு 22)
பில்தாத்:
இவர் சூவாகின் வம்சத்தில் வந்தவர். ஐப்பிராத்து நதியின் கரையோரப் பகுதியில் வாழ்ந்திருக்கலாம்
இவர் இரண்டாவதாக பேசினார், மூன்று தடவை பேசினார். குறைவாக பேசினாலும் எலிப்பாசை விட ரொம்ப குத்தலாக பேசினார்
பில்தாத்தின் குற்றச்சாட்டுகள்:
யோபுவின் மகன்கள் பாவம் செய்ததால்தான் இறந்தார்கள் என்றும் அவர்களுக்கு வந்த முடிவு சரிதான் என்றும் சொன்னார். யோபுவுக்கு கடவுள் பயமே இல்லை என்று சொன்னார் (யோபு 8)
கடவுளுக்கு விரோதமாக யோபு பாவம் செய்பவர் என்று சொன்னார் (யோபு 18)
கடவுளுக்கு உத்தமத்தோடு நடப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொன்னார் (யோபு 25)
சோப்பார்:
சோப்பாரின் குற்றச்சாட்டுகள்:
யோபு அர்த்தமில்லாமல் பேசினார் என்று குற்றம்சாட்டினார். மோசமான பழக்கங்களை விட்டுவிடும்படி யோபுவிடம் சொன்னார் (யோபு 11)
யோபு ரொம்ப கெட்டவர் என்றும் கெட்ட காரியங்கள் செய்வதில் சந்தோஷப்படுகிறவர் என்றும் சொன்னார் (யோபு 20)