உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 4
  • பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • நம்முடைய பிரசுரங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • நம் பைபிள் பிரசுரங்களை ஞானமாக உபயோகியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • பல மொழி பிராந்தியத்தில் பிரசுரங்களை அளித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—2003
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 4
கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டில் இருந்து யெகோவாவின் சாட்சிகள் சொல்வதை ஒரு பெண் கேட்டுக்கொண்டிருக்கிறார்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்

“இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத் 10:8) இயேசு சொன்ன இந்த அறிவுரைக்கு கீழ்ப்படிந்து ஊழியத்தில் நாம் கொடுக்கும் பைபிளுக்கோ பிரசுரங்களுக்கோ பணம் வாங்குவதில்லை. (2கொ 2:17) கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் அருமையான விஷயங்கள்தான் நம் பிரசுரங்களில் இருக்கின்றன. நிறைய சகோதர சகோதரிகள் கடினமாக உழைத்து நம் பிரசுரங்களை அச்சடிக்கிறார்கள், அதை உலகம் முழுவதும் இருக்கும் சபைகளுக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் நிறைய பணமும் செலவாகிறது. அதனால், நமக்கு தேவையானதை மட்டுமே நாம் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்கு பிரசுரங்களை கொடுக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பொது ஊழியம் செய்யும்போதும் அதை ஞானமாக பயன்படுத்த வேண்டும். (மத் 7:6) வெறுமனே பார்ப்பவர்கள் எல்லாரிடமும் பிரசுரங்களை கொடுக்காதீர்கள். அவர்களோடு பேசி, ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட பிரசுரத்தை யாராவது விரும்பி கேட்டால் அதை கொடுங்கள்.—நீதி 3:27, 28.

நீங்கள் சந்தித்த நபர் . . .

  • நீங்கள் சொல்வதை ஆர்வமாக கேட்கிறாரா?

  • நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாரா?

  • பிரசுரத்தை வாசிக்க விரும்புகிறாரா?

  • நன்கொடை கொடுக்கிறாரா?

  • கடவுளுடைய வார்த்தை சொல்வதை மனதார ஏற்றுக்கொள்கிறாரா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்