கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்—மனத்தாழ்மை
ஏன் முக்கியம்?
மனத்தாழ்மை, யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்க்க உதவுகிறது.—சங் 138:6
மனத்தாழ்மை, மற்றவர்களோடு நல்ல பந்தத்தை வளர்க்க உதவுகிறது.—பிலி 2:3, 4
பெருமை அழிவுக்கு வழிநடத்தும்.—நீதி 16:18; எசே 28:17
எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
மற்றவர்களிடம் அறிவுரை கேளுங்கள், அதன்படி நடங்கள்.—சங் 141:5; நீதி 19:20
மற்றவர்களுக்காகச் சின்ன சின்ன வேலைகளைச் செய்யக்கூட தயங்காதீர்கள்.—மத் 20:25-27
உங்களுடைய திறமைகளாலோ பொறுப்புகளாலோ உங்களையே பெரிதாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.—ரோ 12:3
எந்த விதங்களில் நான் இன்னுமதிகமாக மனத்தாழ்மை காட்டலாம்?
உண்மையாக இருப்பதை கெடுக்கும் விஷயங்கள்—பெருமை என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
அறிவுரையை நாம் ஏற்றுக்கொள்ளும் விதம், நம் மனப்பான்மையைப் பற்றி என்ன காட்டுகிறது?
மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள ஜெபம் எப்படி நமக்கு உதவுகிறது?
நாம் என்னென்ன வழிகளில் மனத்தாழ்மை காட்டலாம்?