கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உண்மை வணக்கத்தை ஏன் உயர்வாக மதிக்கிறீர்கள்?
எசேக்கியேல் பார்த்த ஆலய தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட யூதர்களை உற்சாகப்படுத்தியது. உண்மை வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை அது அவர்களுக்குத் தந்தது. இந்தக் கடைசி நாட்களில், உண்மை வணக்கம் ‘எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது’; அதன் பக்கம் வந்திருக்கிற எல்லா தேசத்து ஜனங்களில் நாமும் ஒருவராக இருக்கிறோம். (ஏசா 2:2) யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவருக்குச் சேவை செய்யவும் கிடைத்திருக்கிற பாக்கியத்தை எப்போதும் நினைத்துப் பார்க்கிறீர்களா?
உண்மை வணக்கத்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
ஏராளமான ஆன்மீக உணவு; இது, வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தருகிறது, நடைமுறையான நெறிமுறைகளையும் உறுதியான நம்பிக்கையையும் தருகிறது.—ஏசா 48:17, 18; 65:13; ரோ 15:4
உலகம் முழுவதும் அன்பான சகோதர சகோதரிகள்.—சங் 133:1; யோவா 13:35
கடவுளுடைய சக வேலையாட்களாக, திருப்தியான வேலை செய்யும் பாக்கியம்.—அப் 20:35; 1கொ 3:9
கஷ்டங்களின்போது நம்மைப் பலப்படுத்தும் “தேவசமாதானம்.”—பிலி 4:6, 7
சுத்தமான மனசாட்சி.—2தீ 1:3
யெகோவாவோடு நெருங்கிய நட்பு.—சங் 25:14
உண்மை வணக்கத்தை நான் உயர்வாக மதிப்பதை எப்படியெல்லாம் காட்டலாம்?