பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 20-21
“இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”
பைபிள் காலங்களிலிருந்த திறமைசாலியான மீனவர்கள், நல்ல பலனைப் பெறுவதற்குப் பொறுமையாக இருந்தார்கள், கடினமாக உழைத்தார்கள், கஷ்டங்களைச் சகித்துக்கொண்டார்கள். (w12-E 8/1 பக். 18-20) மனிதர்களைப் பிடிப்பதற்கும் பேதுருவுக்கு அந்தக் குணங்கள் கைகொடுத்திருக்கும். ஆனால், வாழ்க்கையில் எதற்கு முதலிடம் தரவேண்டும் என்பதைப் பற்றி பேதுரு தீர்மானிக்க வேண்டியிருந்தது. அதாவது, தனக்கு மிகவும் பிடித்த மீன்பிடி தொழிலுக்கா, இயேசுவின் சீஷர்களுக்கு ஆன்மீக உணவைப் பரிமாறும் வேலைக்கா, என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது.
கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள்?