உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஏப்ரல் பக். 8
  • யெகோவா தரும் கல்வியை நாடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தரும் கல்வியை நாடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களைப் பயிற்றுவித்தல்
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
  • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பியுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • ஊழியப் பயிற்சிப் பள்ளி—பெரிதும் அனுகூலமுமான கதவு
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஏப்ரல் பக். 8

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவா தரும் கல்வியை நாடுங்கள்

ஏன் முக்கியம்: மகத்தான போதகராகிய யெகோவா, மிகச் சிறந்த கல்வியைத் தருகிறார்; வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிறார். அதோடு, ஓர் அருமையான எதிர்காலத்துக்காக நம்மைத் தயார்படுத்துகிறார். இதையெல்லாம் அவர் இலவசமாகத் தருகிறார்! (ஏசா 11:6-9; 30:20, 21; வெளி 22:17) இந்தக் கல்வியின் மூலம், உயிர் காக்கும் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதற்கும் நமக்குப் பயிற்சி கொடுக்கிறார்.—2கொ 3:5.

எப்படிச் செய்வது:

  • மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.—சங் 25:8, 9

  • யெகோவா இப்போது தரும் பயிற்சியை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உதாரணம்: வாரநாட்களில் நடக்கும் கூட்டங்களில் கிடைக்கிற மாணாக்கர் நியமிப்பு

  • ஆன்மீக இலக்குகளை வையுங்கள்.—பிலி 3:13

  • கூடுதல் பயிற்சிக்காகத் தகுதி பெற, தியாகங்களைச் செய்யுங்கள்.—பிலி 3:8

யெகோவாவின் போதனை ஆசீர்வாதத்தைத் தருகிறது என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லுங்கள்:

  • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்காகச் சிலர் எப்படிப்பட்ட தடைகளைத் தாண்டியிருக்கிறார்கள்?

  • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி எப்படிப்பட்ட பயிற்சியைத் தருகிறது?

  • புதிய நியமிப்புகளைச் செய்ய, இந்தப் பள்ளியில் பட்டம் பெற்றவர்களுக்கு சபையார் எப்படி உதவி செய்திருக்கிறார்கள்?

  • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள என்னென்ன தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்? (kr பக். 189)

  • யெகோவாவின் அமைப்பு தரும் வேறெந்த பயிற்சியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் இலக்கு வைக்கலாம்?

ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் பட்டம் பெற்றவர்கள், நமிபியா, நார்வே, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் சேவை செய்கிறார்கள்

யெகோவா தரும் கல்வியைப் பெற்றுக்கொள்வதால் உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

நான் இவற்றிலிருந்து நன்மையடைந்திருக்கிறேன்:

  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டம்

  • பயனியர் ஊழியப் பள்ளி

  • ராஜ்ய ஊழியப் பள்ளி

  • மூப்பர்களுக்கான பள்ளி

  • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி

நான் எந்தப் பயிற்சியைப் பெற இலக்கு வைத்திருக்கிறேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்