கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மனத்தாழ்மையாக இருங்கள்—பெருமை அடிக்காதீர்கள்
நம்மை பற்றி நாமே தம்பட்டம் அடிப்பதும், மார்தட்டி பேசுவதும் நம்மிடம் பெருமை ஒட்டிக்கொண்டிருப்பதற்கு அடையாளம். இப்படிப் பேசுவது மற்றவர்களை உற்சாகப்படுத்தாது. அதனால்தான், “உன்னை நீயே புகழாதே, இன்னொருவன் உன்னைப் புகழட்டும்” என்று பைபிள் சொல்கிறது.—நீதி 27:2.
யெகோவாவின் நண்பனாகு!—மனத்தாழ்மையா இருங்க என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
மக்கள் பொதுவாக எந்தெந்த விஷயங்களைப் பற்றிப் பெருமை அடிக்கிறார்கள்?
கேலப், எதைப் பற்றித் தன் நண்பனிடம் பெருமை அடித்தான்?
கேலப் மனத்தாழ்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுடைய அப்பா எப்படி அவனுக்குப் புரியவைத்தார்?
மனத்தாழ்மையாக இருக்க 1 பேதுரு 5:5 நமக்கு எப்படி உதவும்?