பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 23-24
ஊர் உலகத்தோடு ஒத்துப்போகாதீர்கள்
வழக்குகளை விசாரிக்கும்போது ஊர் உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காக பொய்சாட்சி சொல்லவோ நியாயத்தைப் புரட்டவோ கூடாது என்று சாட்சி சொல்பவர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் யெகோவா எச்சரிப்பு கொடுத்திருந்தார். இந்த எச்சரிப்பு வாழ்க்கையின் மற்ற விஷயங்களுக்கும் பொருந்துகிறது. உலக மக்களுடைய சிந்தனைக்கும் நடத்தைக்கும் ஒத்துப்போக வேண்டிய சூழ்நிலையைக் கிறிஸ்தவர்கள் தினமும் எதிர்ப்படுகிறார்கள்.—ரோ 12:2.
இந்தச் சூழ்நிலைகளில் ஊர் உலகத்தோடு ஒத்துப்போகாமல் இருப்பது ஏன் நல்லது?
வதந்திகளைக் கேட்கும்போது...
உடை, முடி அலங்காரம் அல்லது பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும்போது...
வேறு இனம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலையில் இருப்பவர்களோடு பழகும்போதும் அவர்களைப் பற்றி யோசிக்கும்போதும்...