கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பொய்களைப் பரப்பாதீர்கள்
பத்திரிகை, ரேடியோ, டிவி, இன்டர்நெட் மூலமாக இன்று லட்சக்கணக்கான மக்களுக்குத் தகவல்களை வேகமாகப் பரப்ப முடியும். ‘சத்தியத்தின் கடவுளை’ வணங்குகிறவர்கள் தெரியாத்தனமாகக்கூட பொய்களைப் பரப்ப விரும்புவதில்லை. (சங் 31:5; யாத் 23:1) பொய்களைப் பரப்புவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஒரு தகவல் உண்மையானதா என்று தெரிந்துகொள்ள உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘இந்தத் தகவல் நம்பகமான இடத்திலிருந்து வருகிறதா?’ தகவலை சொல்பவருக்கு அதைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியாமல் இருக்கலாம். தகவல் எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றால் கவனமாக இருங்கள். ஏனென்றால், ஒரு தகவல் பரப்பப்படும்போது அதிலுள்ள எல்லா விஷயங்களும் உண்மையாக இருக்காது. முக்கியமாக, பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் நம்பகமானவர்களாகக் கருதப்படுவதால், ஒரு தகவலைப் பரப்புவதற்கு முன் அது உண்மைதானா என்று அவர்கள் கண்டிப்பாக நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்
‘இந்தத் தகவல் உண்மையானதா?’ ஒருவருக்கு அல்லது பலருக்கு அது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்றால் அதை நாம் பரப்பாமல் இருப்பது நல்லது.—நீதி 18:8; பிலி 4:8
‘இந்தத் தகவலை நம்பலாமா?’ பரபரப்பான அனுபவங்களையும் கதைகளையும் கேட்கும்போது கவனமாக இருங்கள்
கிசுகிசுப்பதை நிறுத்துவது எப்படி? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
நீதிமொழிகள் 12:18 சொல்கிறபடி நம் வார்த்தைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்?
மற்றவர்களைப் பற்றி என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க பிலிப்பியர் 2:4 நமக்கு எப்படி உதவும்?
மற்றவர்களைப் பற்றி ஒருவர் கிண்டலாகப் பேசும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
மற்றவர்களைப் பற்றி பேசுவதற்குமுன் நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?