பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 12-13
தொழுநோய் சம்பந்தப்பட்ட சட்டங்களிலிருந்து பாடங்கள்
தொழுநோய் சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஆன்மீக ஆரோக்கியத்தை, அதாவது யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை, பலப்படுத்துவது பற்றி என்ன பாடங்களைக் கற்றுத்தருகின்றன?
தொழுநோய் தொற்று இருந்தால் அதை எப்படி உடனடியாகக் கண்டுபிடிக்கலாம் என்று குருமார்களுக்கு யெகோவா சொல்லிக்கொடுத்தார். யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பதை இன்றுள்ள கிறிஸ்தவ மேய்ப்பர்களும் உடனடியாகக் கவனிக்கிறார்கள்.—யாக் 5:14, 15.
தொழுநோய் இன்னும் அதிகமாகப் பரவுவதைத் தடுப்பதற்கு அந்த நோய் தொற்றிய எதையும் இஸ்ரவேலர்கள் அழிக்க வேண்டியிருந்தது. அதேபோல் கிறிஸ்தவர்களும், பாவம் செய்யத் தூண்டுகிற எதையும், அது அவர்களுக்கு எவ்வளவு பிடித்ததாக இருந்தாலும் சரி, அதை விட்டுவிட மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (மத் 18:8, 9) அது நம்முடைய பழக்கவழக்கங்களாக, நண்பர்களாக, அல்லது பொழுதுபோக்குகளாக இருக்கலாம்.
யெகோவாவின் உதவியைப் பெற ரொம்ப ஆசையாக இருப்பதை ஒரு கிறிஸ்தவர் எப்படிக் காட்டலாம்?