ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .
சகோதர சகோதரிகளின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
நமக்கு உதவுவதற்காக சகோதர சகோதரிகள் ‘எல்லாரையும்’ யெகோவா கொடுத்திருக்கிறார். (1பே 5:9) ஊழியத்தில் வரும் சவால்களைச் சமாளிக்க அவர்களால் நமக்கு உதவ முடியும். உதாரணத்துக்கு, ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாளும் சீலாவும் தீமோத்தேயுவும் இன்னும் சிலரும் அப்போஸ்தலன் பவுலுக்கு உதவினார்கள்.—அப் 18:1-5.
ஊழியம் செய்யும்போது சகோதர சகோதரிகள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்? யாராவது மறுப்பு தெரிவித்தால் அவர்களுக்குப் பதில் சொல்வதற்கும், மறுசந்திப்புகள் செய்வதற்கும், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து நடத்துவதற்கும் அவர்கள் சில ஆலோசனைகளைச் சொல்லலாம். உங்கள் சபையில் யாரால் உங்களுக்கு உதவ முடியும் என்று பார்த்து அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் செய்யும்போது இரண்டு பேருக்குமே பிரயோஜனமாக இருக்கும். இரண்டு பேருமே சந்தோஷப்படுவீர்கள்.—பிலி 1:25.
சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்—நம் சகோதரர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஜேட் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நீட்டா எப்படியெல்லாம் முயற்சி செய்தாள்?
நம்முடைய பைபிள் படிப்புகளுக்கு மற்ற சகோதர சகோதரிகளை ஏன் கூட்டிக்கொண்டு போக வேண்டும்?
ஒருவரை சீஷராக ஆக்குவதற்கு சபையில் இருக்கும் எல்லாருடைய உழைப்பும் தேவை
ஜேடுக்கு பிடித்த எந்த விஷயம் அபிகாயிலுக்கு ஒருகாலத்தில் பிடித்திருந்தது?
ஊழியத்தில் என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?