கிறிஸ்தவர்களாக வாழுங்கள் | புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள்
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யுங்கள்
பழக்கமான ஒரு இடத்தை விட்டுவிட்டு தேவை அதிகமுள்ள இடத்துக்குக் குடிமாறிப் போக நமக்கு ரொம்ப விசுவாசம் தேவை. (எபி 11:8-10) அப்படிப் போக நீங்கள் ஆசைப்பட்டால் அதைப் பற்றி மூப்பர்களிடம் பேசுங்கள். செலவைக் கணக்குப் போட்டு பார்ப்பதற்கும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதைப் பற்றி நம் பிரசுரங்கள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள். தேவை அதிகமுள்ள இடத்துக்கு ஏற்கெனவே குடிமாறிப் போனவர்களிடம் பேசுங்கள். (நீதி 15:22) உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (யாக் 1:5) நீங்கள் எந்த இடத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். குடிமாறிப் போவதற்கு முன்பு, உங்களால் முடிந்தால் கொஞ்சம் நாட்களுக்கு அங்கு போய் தங்கியிருந்து பாருங்கள்.
ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்—தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
கேப்ரியல் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது, அதைச் செய்ய எது அவருக்கு உதவியது?