கிறிஸ்தவர்களாக வாழுங்கள் | புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள்
கட்டுமான வேலைக்கு கைகொடுங்கள்
வணக்கத்துக்குத் தேவையான கட்டிடங்களைக் கட்ட உதவுவதும் யெகோவாவுக்குச் செய்கிற சேவைதான். (யாத் 36:1) உங்களுடைய வீட்டு பக்கத்தில் நடக்கிற கட்டுமான சேவையில் உங்களால் அவ்வப்போது கலந்துகொள்ள முடியும் என்றால் உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களுக்கான விண்ணப்பத்தை (DC-50) பூர்த்திசெய்து கொடுங்கள். தூரமாக நடக்கிற கட்டுமான வேலைகளில் சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ உங்களால் கலந்துகொள்ள முடியும் என்றால் வாலண்டியர் சேவைக்கான விண்ணப்பத்தை (A-19) பூர்த்திசெய்து கொடுங்கள். கட்டுமான வேலைகளில் கலந்துகொள்வதற்கு உங்களுக்கு ஏற்கெனவே அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.—நெ 2:1, 4, 5.
ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்—கட்டுமான வேலைக்கு கைகொடுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
சாரா எதை நினைத்து கவலைப்பட்டாள், அவளுக்கு எது உதவி செய்தது?