alfa27/stock.adobe.com
குற்றச்செயல்களுக்கு இயேசு முடிவுகட்டுவார்!
குற்றச்செயல், அநீதி இவையெல்லாம் நம்மை எந்தளவுக்கு பாடாய் படுத்தும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அவரும் அபாண்டமாக குற்றம்சாட்டப்பட்டார், அநியாயமாக விசாரிக்கப்பட்டார், அடிக்கப்பட்டார், தண்டனை விதிக்கப்பட்டார், துடிதுடித்துக் கொல்லப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், மனப்பூர்வமாகவும் சுயநலமில்லாமலும் “பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை” தியாகம் செய்தார். (மத்தேயு 20:28; யோவான் 15:13) இப்போது கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருக்கும் இயேசு, உலகம் முழுவதும் நடக்கிற குற்றச்செயல்களை அடியோடு ஒழித்துக்கட்டி சீக்கிரத்தில் நீதியை நிலைநாட்டுவார்.—ஏசாயா 42:3.
இயேசு நடவடிக்கை எடுத்த பிறகு இந்த உலகம் எப்படி மாறும் என்பதை பைபிள் இப்படி விவரிக்கிறது:
“பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
இயேசு இதுவரை செய்திருக்கும் விஷயங்களுக்காகவும் இனிமேல் செய்யப்போகிற விஷயங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? ஒரு வழி, இயேசு பிரசங்கித்த “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” அதிகம் தெரிந்துகொள்வது. (லூக்கா 4:43) “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.