உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 12
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • குழந்தை பிறந்த பிறகு சுத்திகரிப்புக்காகச் செய்ய வேண்டியவை (1-8)

லேவியராகமம் 12:2

இணைவசனங்கள்

  • +லேவி 15:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2012, பக். 17

    5/15/2004, பக். 23

லேவியராகமம் 12:3

இணைவசனங்கள்

  • +ஆதி 17:12; 21:4; லூ 1:59; 2:21, 22; யோவா 7:22

லேவியராகமம் 12:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 23

லேவியராகமம் 12:6

இணைவசனங்கள்

  • +லேவி 1:10

லேவியராகமம் 12:8

இணைவசனங்கள்

  • +லேவி 1:14; 5:7; 14:21, 22; லூ 2:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 23

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 12:2லேவி 15:19
லேவி. 12:3ஆதி 17:12; 21:4; லூ 1:59; 2:21, 22; யோவா 7:22
லேவி. 12:6லேவி 1:10
லேவி. 12:8லேவி 1:14; 5:7; 14:21, 22; லூ 2:24
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 12:1-8

லேவியராகமம்

12 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு பெண் கர்ப்பமாகி ஆண் குழந்தையைப் பெற்றால், ஏழு நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு+ நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். 3 எட்டாம் நாளில் அந்த ஆண் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ 4 இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 33 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அந்தச் சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான எதையும் அவள் தொடக் கூடாது, பரிசுத்த இடத்துக்குள் வரவும் கூடாது.

5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், 14 நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 66 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். 6 ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவள் தன்னுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்ததும், ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ ஒரு புறாக் குஞ்சை அல்லது காட்டுப் புறாவைப் பாவப் பரிகார பலியாகவும் கொண்டுவர வேண்டும். அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 7 அவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் செலுத்தி, அவளுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்கி அவள் சுத்தமாவாள். ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவளுக்காகக் கொடுக்கப்படும் சட்டம் இதுதான். 8 ஆனால், ஆட்டுக்குட்டியைக் கொடுக்க வசதி இல்லாவிட்டால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ அவள் கொண்டுவர வேண்டும். ஒன்றைத் தகன பலியாகவும் மற்றொன்றைப் பாவப் பரிகார பலியாகவும் கொடுக்க வேண்டும். அவளுக்காக குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவள் சுத்தமாவாள்’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்