பாட்டு 215
மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல்
1. துன்மார்க்கரை அழிக்கநினைத்தார்
ஜலப்பிரளயத்தால் அழித்தார்.
நோவாவுக்கோர் பொறுப்பளித்தாரே:
‘பேழைசெய்! பிரசங்கி!’ என்றாரே.
நோவாஅவ்வேலையை மறுத்தாரோ?
அனுபவம் இல்லை என்றாரோ?
இல்லை, பேழையைக் கட்டிமுடித்தார்;
தொடர்ந்து பிரசங்கமும் செய்தார்.
2. ஆம், இவ்வொழுங்கும் முடிவடையும்
சொல்லவேண்டும் நற்செய்தியையும்.
கேட்போரை இரட்சிக்கும் ஓர்ஏற்பாடு
தேவ இரக்கத்தின் ஏற்பாடு.
பிரசங்கிக்க இயலாதென்றாயா?
“பேச்சில்பலவீனன்,” என்றாயா?
பெறுதேவனின் இரக்கத்தையும்.
பிரசங்கி, ஆவிதுணை செய்யும்.
3. சத்தியம், இரக்கம் ஒன்றுசேர்த்தாரே,
“தேசத்தில்” சந்தோஷம் தந்தாரே.
கட்டளைகளைக் கைக்கொண்டிருப்போம்.
புதுலகம் முன்பே ருசிப்போம்!
பிறருக்கிரக்கம் காட்டவேண்டும்.
எங்கும் நாம் போதித்திடவேண்டும்:
முழுமையாக ஒப்புக்கொடுங்கள்;
தேவராஜ்யத்தை சேவியுங்கள்.