பாட்டு 66
தயவின் வல்லமை
1. வீழ்ந்த மக்களாயிருக்க,
தயை பெற்றிருக்க,
தேவனுக்கே நன்றி சொல்வோம்;
அவரைப் போற்றுவோம்.
சக்திமிக்க தேவன்அவர்,
அக்கறையும் காண்பிப்பவர்.
அவர் தயை சிறந்ததே,
நம்மைச் சேர்க்கிறதே.
2. இயேசு சத்தியத்தைப்
போதித்தார், சாந்தமாயிருந்தார்.
பலவீனரையும் பார்த்தார்,
தயவாய்க் கற்பித்தார்.
போதனையும் அன்பார்ந்தது;
ஆத்துமாவைத் தேற்றினது.
பாவிகளை மாற்றியது.
மனந்திருப்பிற்று.
3. தேவன், கிறிஸ்துவை பின்பற்று;
ஆசீர்வாதம் பெறு.
தேவதயை காட்டவேண்டும்.
கனி தரவேண்டும்.
பிரச்னை எதிர்ப்படும்போது
பரிகாரம் அதில்உண்டு.
நாம் சாந்தமாக இருப்போம்,
தயவாய் நடப்போம்.
4. தயவின் வல்லமையையும்,
அதன் மேன்மையையும்
எல்லாரும் மதித்துணர்வோம்.
நன்மை பல செய்வோம்!
பெறுபவர், கொடுப்பவர்,
ஆசீர்வதிக்கப்படுவர்.
தேவதயைகாட்டிடுவோம்.
தவனைப் போற்றுவோம்.