எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துங்கள்
1. உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? துண்டுப்பிரதி எதற்கு உதவியாய் இருக்கிறது?
1 உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதி பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சத்திய விதைகளைத் தூவுவதிலும் இது பயனுள்ளதாய் இருக்கிறது. (பிர. 11:6) ஊழியத்தில் இதைத் திறம்பட்ட விதத்தில் அளிப்பதற்கு இதோ சில வழிகள்:
2. முதல் சந்திப்பில் இந்தத் துண்டுப்பிரதியை எப்படிப் பயன்படுத்தலாம்?
2 முதல் சந்திப்பில்: வீட்டுக்காரருக்கு ஆர்வமூட்டுகிற ஒரு விஷயத்தைச் சொல்லி உரையாடலை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேச அவருக்கு ஆர்வம் இருப்பது தெரிந்தால், அவரிடம் துண்டுப்பிரதியைக் கொடுத்து அதின் முதல் பக்கத்திலுள்ள ஆறு கேள்விகளைக் காட்டி “இந்தக் கேள்விகளைப் பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?” என்று கேளுங்கள். அவருடைய பதிலைத் தெரிந்துகொண்ட பிறகு அவர் குறிப்பிடுகிற கேள்விகளில் ஒரு கேள்விக்கு பைபிள் தரும் பதிலை அந்தத் துண்டுப்பிரதியிலிருந்தே காட்டுங்கள்; பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வசனத்தை பைபிளிலிருந்து வாசியுங்கள். கடைசி பக்கத்திலுள்ள தகவலை வாசியுங்கள் அல்லது சுருக்கமாகச் சொல்லுங்கள். அவர் அந்தத் துண்டுப்பிரதியை வாசிக்க விரும்பினால் அவரிடம் கொடுங்கள். சத்திய விதை அவருடைய இருதயத்தில் வேரூன்ற இது வழிசெய்யலாம். (மத். 13:23) அவருக்கு பைபிள்மீது உண்மையிலேயே மதிப்பு இருப்பது தெரிந்தால், மறுசந்திப்பின்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுங்கள்.
3. ஆர்வம் காட்டுகிற வீட்டுக்காரர் வேலையாக இருந்தால் என்ன செய்யலாம்?
3 ஆர்வம் காட்டுகிற வீட்டுக்காரர் வேலையாக இருந்தால்: நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இப்போது நீங்கள் வேலையாக இருப்பதால் பைபிள் சம்பந்தமான இந்தத் துண்டுப்பிரதியை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகட்டுமா? இதில் நாம் பொதுவாகக் கேட்கிற ஆறு கேள்விகள் இருக்கின்றன; இவற்றிற்கு பைபிள் தரும் தெளிவான பதில்களும் இருக்கின்றன. இந்தக் கேள்விகளில் எதற்காவது நீங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள விரும்பினால் அடுத்த முறை வந்து சந்திக்கிறேன்.”
4. பள்ளியில் அல்லது வேலை செய்யுமிடத்தில் ஒருவருக்கு இந்தத் துண்டுப்பிரதியைக் கொடுக்கையில் நாம் என்ன சொல்லலாம்?
4 பள்ளியில் அல்லது வேலை செய்யுமிடத்தில்: மதிய இடைவேளையில் உங்கள் நண்பரிடம் பேசும்போது இவ்வாறு சொல்லலாம்: “இந்தக் கேள்விகள் உங்கள் மனதிலும் எப்போதாவது வந்திருக்கிறதா? [பதில் சொல்ல அனுமதியுங்கள். அவர் விருப்பப்பட்டால் தொடர்ந்து பேசுங்கள்.] இவற்றிற்கு வேதப்புத்தகம் தரும் தெளிவான, திருப்தியான பதில்கள் இந்தத் துண்டுப்பிரதியில் இருக்கின்றன.” அவருக்கு நேரமிருந்தால், இந்தத் துண்டுப்பிரதியிருந்து ஒரு கேள்விக்கான பதிலை அவருக்குக் காட்டுங்கள்; பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக்கூடக் கொடுங்கள்.
5. உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த கருவியென ஏன் சொல்லலாம்?
5 உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதி, சத்தியத்தை எளிமையாகவும் நேரடியாகவும் விளக்குகிறது. எல்லா மதத்தையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த ஆட்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டிக்கிறது. இளைஞர்களானாலும் சரி புதிய பிரஸ்தாபிகளானாலும் சரி, எல்லாராலுமே இதை ஊழியத்தில் சுலபமாகக் கொடுக்க முடியும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நீங்கள் கொடுக்கிறீர்களா?
6. துண்டுப்பிரதியை அளிப்பதற்கு முன்பு எப்போதுமே வீட்டுக்காரரின் மனநிலையை ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?
6 இந்தத் துண்டுப்பிரதியை நாம் கவனமாக அளிக்க வேண்டும்; ஏனென்றால், நம்மை எதிர்ப்பவர்கள் இந்தத் துண்டுப்பிரதியின் தலைப்பைப் பார்த்துவிட்டு நம் உள்நோக்கத்தைத் தவறாக எடைபோட வாய்ப்பிருக்கிறது. நம்முடைய பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளும்படி யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை. எனவே முதலில், ஒருவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்; உண்மையிலேயே சத்தியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டுமே இந்தத் துண்டுப்பிரதியைக் கொடுங்கள்.