பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 3-5
முதல் பொய்யினால் வந்த விபரீதங்கள்
ஏவாளிடம் சாத்தான் பொய் சொன்ன சமயத்திலிருந்து எல்லா மனிதர்களையும் அவன் ஏமாற்றிவருகிறான். (வெளி 12:9) சாத்தான் இந்தப் பொய்களைப் பரப்பியிருக்கிறான்:
கடவுள் என்ற ஒருவர் இல்லை
கடவுள் புரிந்துகொள்ள முடியாத திரித்துவமாக இருக்கிறார்
கடவுளுக்கு ஒரு பெயர் இல்லை
கடவுள் மக்களை எரிநரகத்தில் என்றென்றும் வாட்டி வதைக்கிறார்
கடவுளுடைய சித்தப்படிதான் எல்லாமே நடக்கிறது
கடவுளுக்கு மனிதர்கள்மேல் அக்கறை இல்லை
இந்தப் பொய்கள், யெகோவாவிடம் நெருங்கி வராதபடி மக்களை எப்படித் தடுக்கின்றன?
யெகோவாவைப் பற்றி இந்த அபாண்டமான பொய்களை சாத்தான் பரப்பியிருப்பதை நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
கடவுளுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க உங்கள் பங்கில் என்ன செய்யலாம்?