பாடல் 86
விசுவாசமிக்க பெண்கள், கிறிஸ்தவ சகோதரிகள்
1. சா-ராள், ம-ரி-யாள், எஸ்-தர், ரூத்-தைப் போ-லே
நல்-ல பெண்-கள் வாழ்ந்-தார்-கள் அந்-நா-ளி-லே;
தே-வ பக்-திக்-கு முன்-மா-தி-ரி-க-ளே;
பத்-தி-னிப் பெண்-க-ளே; உத்-த-மி-க-ளே!
அ-தே போன்-ற நல் பெண்-ம-ணி-க-ளே,
யெ-கோ-வா கண்-ணி-லே வை-ர ம-ணி-க-ளே!
2. அன்-பு, விஸ்-வா-சம், தைர்-யம், க-ரு-ணை-யே,
அப்-பெண்-கள் நி-னைப்-பூட்-டும் பண்-பு-க-ளே;
எங்-கள் க்றிஸ்-த-வ ச-கோ-த-ரி-க-ளே,
அப்-பண்-பு-க-ளில் ஜொ-லிக்-கி-றீர்-க-ளே!
நற்-செ-ய-லில் ந-வ-ரத்-னங்-க-ளே,
ம-கிழ்ச்-சி ம-ல-ராய் தி-கழ்-கி-றீர்-க-ளே!
3. தாய், ம-கள், கைம்-பெண், ச-கோ-த-ரி-மா-ரே,
உள்-ளப்-பூர்-வ-மா-க உ-ழைக்-கி-றீ-ரே,
என்-றும் கீழ்ப்-ப-டிந்-து ந-டக்-கி-றீ-ரே,
யெ-கோ-வா மெச்-சி அங்-கீ-க-ரிப்-பா-ரே!
ப-ணி-வா-ன பட்-டு ம-னங்-க-ளே,
ப-ரி-சு நிச்-ச-யம், பா-சப் புஷ்-பங்-க-ளே!
(காண்க: பிலி. 4:3; 1 தீ. 2:9, 10; 1 பே. 3:4, 5.)