பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 29-30
யெகோவாவுக்குக் கொடுக்கும் காணிக்கை
வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட்ட சமயத்தில் அந்த வேலைக்காக காணிக்கை கொடுக்க இஸ்ரவேலர்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. இன்று நாம் எப்படி யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்கலாம்? அதற்கு ஒரு வழி, யெகோவாவை வணங்குவதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடங்களுக்காக நன்கொடை கொடுப்பது. உதாரணத்துக்கு ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், மொழிப்பெயர்ப்பு அலுவலகங்கள், பெத்தேல் வளாகங்கள் போன்ற கட்டிடங்களுக்காக பண உதவி செய்யலாம்.
உண்மை வணக்கத்துக்காக பண உதவி செய்வதைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?