உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 3 பக். 5
  • 2 சூழ்நிலையைச் சமாளியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2 சூழ்நிலையைச் சமாளியுங்கள்
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • 1 யதார்த்தமாக இருங்கள்
    விழித்தெழு!—2016
  • பழக்கதோஷத்தால் பயன் பெறுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • முன்னுரை
    விழித்தெழு!—2016
  • கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—2016
g16 எண் 3 பக். 5
உடற்பயிற்சிக்கான உடைகள், ஷூக்கள், வாட்டர் பாட்டில், தூக்கிச் செல்லக்கூடிய எலக்ட்ரானிக் கருவி ஆகியவை ராத்திரியே எடுத்து வைக்கப்பட்டுள்ளன

அட்டைப்படக் கட்டுரை | நல்ல பழக்கங்களை வளர்க்க சில வழிகள்...

2 சூழ்நிலையைச் சமாளியுங்கள்

  • நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள், ஆனால் ஐஸ் கிரீம் டப்பாவைப் பார்த்ததும் உங்களுடைய நாக்கில் எச்சில் ஊறுகிறது.

  • புகைப்பிடிப்பதை விட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் மறுபடியும் உங்களுடைய நண்பர் உங்களிடம் வந்து, நீங்கள் விட்டுவிட முயற்சி செய்வது தெரிந்திருந்தும், ஒரு சிகரெட்டை நீட்டுகிறார்.

  • இன்றைக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய ஷூவைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது!

இந்த உதாரணங்களில் இருக்கிற பொதுவான விஷயத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு... கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவதற்கு... நம்முடைய சூழ்நிலையும் சகவாசமும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இதை நாம் அனுபவத்திலிருந்து தெரிந்து வைத்திருக்கிறோம்.

பைபிள் தரும் அறிவுரை: “புத்தியுள்ளவர் ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறார்; அனுபவமில்லாதவர்களோ நேராகப் போய் மாட்டிக்கொள்கிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3, NW.

முன்கூட்டியே யோசித்துப் பார்க்கும்படி பைபிள் நமக்கு ஆலோசனை தருகிறது. அப்படிச் செய்தால், நம்முடைய இலக்கை அடைவதற்கு முட்டுக்கட்டைகளாக இருப்பதையெல்லாம் கவனமாக ஒதுக்கித் தள்ளிவிடலாம். அதுமட்டுமல்ல, நம்முடைய இலக்குகளை அடைவதற்குச் சாதகமான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். (2 தீமோத்தேயு 2:22) சுருக்கமாகச் சொன்னால், நம்முடைய சூழ்நிலையைச் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

கெட்ட பழக்கத்தில் ஈடுபடுவதைக் கஷ்டமாக்குங்கள். நல்ல பழக்கத்தில் ஈடுபடுவதைச் சுலபமாக்குங்கள்

நீங்கள் என்ன செய்யலாம்

  • கெட்ட பழக்கத்தில் ஈடுபடுவதைக் கஷ்டமாக்குங்கள். உதாரணத்துக்கு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்று விரும்பினால், அதை சமையல் அறையில் வைக்காதீர்கள். அப்படிச் செய்தால்தான், ஆசை வரும்போது அதை சாப்பிடுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

  • நல்ல பழக்கத்தில் ஈடுபடுவதைச் சுலபமாக்குங்கள். உதாரணத்துக்கு, காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால், ராத்திரி தூங்குவதற்கு முன்பே உங்களுடைய ஷூவையும் டிரெஸ்சையும் படுக்கைக்குப் பக்கத்திலேயே எடுத்து வைத்துவிடுங்கள். ஒரு பழக்கத்தை ஆரம்பிப்பது எந்தளவு சுலபமாக இருக்கிறதோ அந்தளவு அதைத் தொடர்ந்து செய்வதும் சுலபமாக இருக்கும்.

  • உங்களுடைய நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நாம் யாரிடம் நேரம் செலவிடுகிறோமோ அவர்களைப் போலவே மாற விரும்புவோம். (1 கொரிந்தியர் 15:33) அதனால், நீங்கள் ஒழித்துக்கட்ட விரும்புகிற பழக்கங்களைச் செய்யத் தூண்டுகிறவர்களோடு பழகுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்... மாறாக நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவி செய்கிறவர்களோடு நட்பு வைத்துக்கொள்ளுங்கள். (g16-E No. 4)

சில பைபிள் அறிவுரைகள்

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.” —நீதிமொழிகள் 13:20

“சுறுசுறுப்பாக இருப்பவருடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.”—நீதிமொழிகள் 21:5, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்