உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 14-15
  • நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொள்வது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொள்வது
  • விழித்தெழு!—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்ல ஒழுக்கங்கள் என்றால் என்ன?
  • நல்ல ஒழுக்கங்கள் ஏன் முக்கியம்?
  • நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொடுப்பது எப்படி?
  • 7 ஒழுக்கநெறிகள்
    விழித்தெழு!—2018
  • மாறிவரும் நெறிகளால் தத்தளிக்கும் உலகம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • ஆட்டங்காணா வாழ்க்கைக்கு அழியா நெறிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • மக்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 14-15
ஒரு பெண் தவறுதலாகக் கீழே போட்டுவிட்ட பர்ஸைத் தன்னுடைய அம்மா எடுத்துக் கொடுப்பதை ஒரு சிறுமி கவனிக்கிறாள்

பாடம் 6

நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொள்வது

நல்ல ஒழுக்கங்கள் என்றால் என்ன?

நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் ஒருவர், சரி எது தவறு எது என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பார். அப்போதைக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படி நடக்காமல், குறிப்பிட்ட நெறிமுறைகளை எப்போதும் கடைப்பிடிப்பார், அதுவும் மற்றவர்கள் பார்க்காத சமயங்களில்கூட!

நல்ல ஒழுக்கங்கள் ஏன் முக்கியம்?

பிள்ளைகள் கேட்கும் இசை, அவர்கள் பார்க்கும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என எல்லாமே நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் சித்தரிக்கின்றன. அவர்களோடு படிக்கும் பிள்ளைகளும் இதைத்தான் செய்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கற்றுத்தரப்படும் ஒழுக்கநெறிகள் சரியானவைதானா என்ற சந்தேகம் பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது.

முக்கியமாக, டீனேஜ் பருவத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை. அந்தப் பருவத்தில், “ஊர் உலகத்துக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்றுதான் நண்பர்களும் மற்றவர்களும் வற்புறுத்துவார்கள் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். நண்பர்களுக்குப் பிடிக்காவிட்டால்கூட, சரியானதைச் செய்ய அவர்கள் தீர்மானமாக இருக்க வேண்டும்” என்று ஒரு புத்தகம் (Beyond the Big Talk) சொல்கிறது. அப்படியென்றால், பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை எட்டுவதற்கு முன்பே பெற்றோர் இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

சரி எது, தவறு எது என்று புரியவையுங்கள்.

பைபிள் ஆலோசனை: ‘முதிர்ச்சியுள்ளவர்கள் . . . சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிறார்கள்.’—எபிரெயர் 5:14.

  • சரி எது, தவறு எது என்று நேரடியாகச் சொல்லுங்கள். தினமும் நடக்கும் விஷயங்களைச் சுட்டிக்காட்டி, “நேர்மையா நடக்கறதுன்னா இதுதான்; இது நேர்மை இல்ல,” “விசுவாசமா நடக்கறதுன்னா இதுதான்; இது விசுவாசம் இல்ல,” “அன்பா நடக்கறதுன்னா இதுதான்; இது அன்பு இல்ல” என்றெல்லாம் சொல்லுங்கள். காலப்போக்கில், எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்பதை உங்கள் பிள்ளையால் புரிந்துகொள்ள முடியும்.

  • காரணங்களை விளக்குங்கள். “ஏன் நேர்மையா இருக்குறது நல்லதுன்னு நினைக்கிற? பொய் சொன்னா ஏன் நம்ம ஃப்ரெண்ட்ஸ் நம்மளவிட்டு பிரிஞ்சிடுவாங்க? திருடுறது ஏன் தப்பு?” போன்ற கேள்விகளைக் கேளுங்கள். காரணங்களை எடுத்துச் சொல்வதன் மூலம், நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கும் திறனையும் நல்ல மனசாட்சியையும் வளர்த்துக்கொள்ள உதவுங்கள்.

  • நன்மைகளை வலியுறுத்துங்கள். “நீ நேர்மையா நடந்துகிட்டா மத்தவங்க உன்னை நம்புவாங்க,” “நீ அன்பா நடந்துகிட்டா எல்லாரும் உன்கிட்ட பழக ஆசைப்படுவாங்க” என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம்.

நல்ல ஒழுக்கங்களை உங்கள் குடும்பத்தின் அடையாளமாக்குங்கள்.

பைபிள் ஆலோசனை: “நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்.”—2 கொரிந்தியர் 13:5.

  • குடும்பத்தில் இருக்கும் எல்லாருமே நல்ல ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், உங்களால் இப்படியெல்லாம் நேர்மையாகச் சொல்ல முடியும்:

    • “நம்ம குடும்பத்துல யாருமே பொய் சொல்ல மாட்டோம்.”

    • “மத்தவங்கள அடிக்கற பழக்கமும் கோபத்துல கத்துற பழக்கமும் நமக்கு இல்ல.”

    • “மத்தவங்க மனச கஷ்டப்படுத்துற மாதிரி நாம பேச மாட்டோம்.”

நீங்கள் இப்படிச் செய்யும்போது, பிள்ளைகள் நல்ல ஒழுக்கங்களைத் தாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களாகப் பார்க்காமல், உங்கள் குடும்பத்தின் அடையாளமாகப் பார்ப்பார்கள்.

  • குடும்பமாக நீங்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகளைப் பற்றி உங்கள் பிள்ளையிடம் அடிக்கடி பேசுங்கள். தினமும் நடக்கும் விஷயங்களையே உதாரணமாகச் சொல்லி அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை, நீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கநெறிகள், டிவியிலிருந்தோ பள்ளியிலிருந்தோ உங்கள் பிள்ளை தெரிந்துகொள்ளும் விஷயங்களிலிருந்து எப்படி வித்தியாசமாக இருக்கின்றன என்று நீங்கள் விளக்கலாம். அதன் பிறகு, “நீ என்ன செஞ்சிருப்ப?” “நாம என்ன செஞ்சிருப்போம்?” என்றெல்லாம் கேளுங்கள்.

தீர்மானமாக இருக்க உதவுங்கள்.

பைபிள் ஆலோசனை: “நல்ல மனசாட்சியோடு இருங்கள்.”—1 பேதுரு 3:16.

  • நல்லது செய்யும்போது பாராட்டுங்கள். உங்கள் பிள்ளை நல்ல விதமாக நடந்துகொள்ளும்போது, அதைக் குறிப்பாகச் சொல்லிப் பாராட்டுங்கள். உதாரணத்துக்கு, “நீ நேர்மையா நடந்துகிட்ட. அதனால உன்னை நெனச்சா பெருமை இருக்கு” என்று சொல்லுங்கள். ஏதாவது தப்பு செய்துவிட்டதாக உங்கள் பிள்ளை சொல்லும்போது, அவனைத் திருத்துவதற்கு முன்பு, தப்பை நேர்மையாக ஒத்துக்கொண்டதற்காக மனதாரப் பாராட்டுங்கள்.

  • கெட்டது செய்யும்போது திருத்துங்கள். உங்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்பதைப் புரிய வையுங்கள். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்பதையும், குடும்பத்தில் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கநெறிகளுக்கு அது எப்படி நேர்மாறாக இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கண்டித்தால் அவர்கள் மனம் கஷ்டப்படும் என்று பெற்றோர்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால்தான் அவர்கள் நல்ல மனசாட்சியை வளர்த்துக்கொள்வார்கள், கெட்டதைச் செய்யாமலும் இருப்பார்கள்.

பிள்ளை வளர்ப்பைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.

ஒரு பெண் தவறுதலாகக் கீழே போட்டுவிட்ட பர்ஸைத் தன்னுடைய அம்மா எடுத்துக் கொடுப்பதை ஒரு சிறுமி கவனிக்கிறாள்

இப்போதே பழக்குங்கள்

பெற்றோர் நேர்மையாக நடந்துகொண்டால், அதைப் பார்த்துப் பிள்ளைகளும் நேர்மையாக நடந்துகொள்வார்கள், யாரும் பார்க்காத சமயங்களில்கூட!

வாழ்ந்து காட்டுங்கள்

  • என் குடும்பத்துக்கு அடையாளமாக இருக்கும் நல்ல ஒழுக்கங்களைப் பேச்சிலும் நடத்தையிலும் நான் கடைப்பிடிப்பதை என் பிள்ளைகளால் பார்க்க முடிகிறதா?

  • நானும் என் துணையும் ஒரே விதமான ஒழுக்கநெறிகளைத்தான் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறோமா?

  • ஒழுக்கநெறியைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில், ‘இதெல்லாம் பிள்ளைங்களுக்குத்தான், பெரியவங்களுக்கு இல்ல’ என்று சாக்குப்போக்கு சொல்கிறேனா?

எங்கள் அனுபவம் . . .

“மத்தவங்க சரியானத செஞ்சப்போ என்ன நன்மைகள் கிடைச்சுது... தப்பான முடிவுகள எடுத்தப்போ என்ன நடந்துச்சு... அப்படின்னெல்லாம் எங்க பிள்ளைங்ககிட்ட சொன்னோம். அவங்களோட ஒரு ஃப்ரெண்டு தப்பான முடிவ எடுத்தத பத்தி ஒரு தடவ எங்க பிள்ளைங்க எங்ககிட்ட சொன்னாங்க. அத பத்தி நாங்க அவங்ககிட்ட விளக்கமா பேசுனோம். ஏன்னா, அவங்களும் அதே தப்ப செஞ்சிட கூடாதுன்னு நெனச்சோம்.”​—நிக்கோல்.

“சின்ன வயசுல இருந்தே எங்க பொண்ணுகிட்ட, எது நல்லது... எது கெட்டது... நல்லது செஞ்சா என்ன நடக்கும்... கெட்டது செஞ்சா என்ன நடக்கும்... அப்படின்னெல்லாம் தெளிவா சொன்னோம். அதனால, சரியான முடிவுகள எடுக்க அவ கத்துக்கிட்டா. இது எல்லாருமே கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம். ஏன்னா, நாம எந்த வயசுல இருந்தாலும் சரி, வாழ்க்கைல நிறைய தீர்மானங்கள எடுக்க வேண்டியிருக்கு.​—யோலாண்டா.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்