உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 8/15 பக். 20
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கொடுத்த வாக்கை மீறினார்கள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பொன் கன்றுக்குட்டி
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 8/15 பக். 20

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கினதற்காக ஆரோனைக் கடவுள் ஏன் தண்டிக்கவில்லை?

உருவ வழிபாடு சம்பந்தமாகக் கடவுள் கொடுத்த சட்டத்தை ஆரோன் மீறினார்தான். (யாத். 20:3-5) இருந்தாலும், மோசே ஆரோனுக்காகக் கடவுளிடம் விண்ணப்பம் பண்ணினார். அவர் செய்த விண்ணப்பம் ‘மிகவும் வல்லமையுள்ளதாய்’ இருந்தது. (யாக். 5:16) ஏனென்றால், ஆரோன் பல வருடங்களாக கடவுளுக்கு விசுவாசமுள்ளவராய் நடந்தார். அவர் ஜனங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கிவிட்டபோதிலும், பிற்பாடு அவர் நடந்துகொண்ட விதம் இந்த உருவ வழிபாட்டுக்கு அவர் ஆதரவு காட்டவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. எப்படியெனில், லேவி புத்திரரோடு சேர்ந்து ஆரோனும் யெகோவாவின் பக்கம் உறுதியாக நின்றார். (யாத். 32:25-29)—5/15, பக்கம் 21.

• துணையே துரோகியானால் அதை எப்படிச் சமாளிக்கலாம்?

குற்றமற்ற கணவரோ மனைவியோ பைபிள் நியமங்களுக்கு ஏற்ப வாழ முயலும் பட்சத்தில், துணை செய்த துரோகத்தைக் குறித்துக் குற்றவுணர்வால் வாட வேண்டியதில்லை. உங்களுக்கு ஆறுதலும் ஊக்குவிப்பும் தேவை என்று யெகோவா அறிவார். கிறிஸ்தவச் சபையிலுள்ள சகோதர சகோதரிகள் மூலம் அவர் ஆறுதலளிக்கலாம்.—6/15, பக்கங்கள் 30-31.

• வாசிப்பதற்கான ஆசையைப் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி ஊட்டி வளர்க்கலாம்?

அன்பான சூழலும் பெற்றோரின் முன்மாதிரியும் இதற்குப் பெரிதும் கைகொடுக்கிறது. அதோடு, அவர்களுக்கென்று புத்தகங்களைக் கொடுங்கள். சத்தமாக வாசியுங்கள், வாசிப்பில் அவர்களை ஈடுபடுத்துங்கள், வாசித்தவற்றைக் கலந்துபேசுங்கள், உங்களிடம் வாசித்துக் காட்டச் சொல்லுங்கள், கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள்.—7/15, பக்கம் 26.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்