உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 8/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • இதே தகவல்
  • யெகோவா சிம்சோனுக்குப் பலம் தருகிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • மிகவும் பலமுள்ள மனிதன்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • உங்கள் தலைமுடியைப் பற்றி கவலையா?
    விழித்தெழு!—2002
  • யெகோவாவின் பலத்தில் சிம்சோன் வெற்றி சிறக்கிறார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 8/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

சிம்சோனின் பலத்திற்குக் காரணம் அவருடைய தலைமயிரா?

சிம்சோனின் பலத்திற்குக் காரணம், வெறும் அவருடைய தலைமயிர் அல்ல, ஒரு நசரேயனாக யெகோவாவுடன் அவருக்கிருந்த விசேஷ உறவே. அந்த உறவுக்கு அவருடைய தலைமயிர் அடையாளமாக இருந்தது. தெலீலாள் அவரது தலைமயிரைக் கத்தரித்தபோது அந்த விசேஷ உறவில் விரிசல் விழுந்தது.​—4/15, பக்கம் 9.

இருதயத்தைப் பாதுகாக்க உதவும் என்ன மூன்று விஷயங்கள் நம் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பாதுகாக்கவும் உதவும்?

(1) ஊட்டச்சத்து. நம் இருதயம் நலமுடன் இருக்க நாம் போதுமானளவு ஊட்டச் சத்தைப் பெற வேண்டும். அதேபோல், ஆன்மீக ரீதியில் நம் இருதயம் நலமுடன் இருக்க தனிப்பட்ட படிப்பு, தியானம், கூட்டங்கள் ஆகியவற்றில் தவறாமல் ஈடுபட வேண்டும். (2) உடற்பயிற்சி. நம் அடையாள அர்த்தமுள்ள இருதயம் ஆரோக்கியமாய் இருக்க ஊழியத்தில் நாம் ஊக்கமாய் ஈடுபட வேண்டும். (3) சுற்றுச்சூழல். நம்மீது உண்மையான அன்பையும் அக்கறையையும் காட்டுகிற சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவுகொள்வதன் மூலம் நம் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.​—4/15, பக்கம் 16.

சவ அடக்க பேச்சைக் கொடுப்பவர் சங்கீதம் 116:​15-ஐ ஏன் இறந்துபோனவருக்குப் பொருத்தக் கூடாது?

‘யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது’ என்று அந்த வசனம் சொல்கிறது. அப்படியென்றால், தம்மை உண்மையாய் வணங்கும் ஒவ்வொருவரின் உயிரையும் யெகோவா பொக்கிஷமாய்க் கருதுகிறார் என்று தெரிகிறது. தம்முடைய உண்மை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட யெகோவா அனுமதிக்க மாட்டார்.​—5/15, பக்கம் 22.

“கால்பார்ட்டர்கள்” யார்?

இன்றைய “பயனியர்கள்”தான் 1931-க்கு முன்பு “கால்பார்ட்டர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.​—5/15, பக்கம் 31.

தானியேல் 2:​44-ல், ‘அந்த ராஜ்யங்களெல்லாம்’ எதைக் குறிக்கிறது?

சிலையின் பல்வேறு பாகங்களுக்குப் படமாக இருக்கும் ராஜ்யங்களையே அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.​—6/15, பக்கம் 17.

ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ஏழாவது உலக வல்லரசாக எப்போது ஆனது?

முதல் உலகப் போரில் பிரிட்டனும், அமெரிக்காவும் கைகோர்த்து செயல்பட்டபோது ஏழாவது உலக வல்லரசு உருவானது.​—6/15, பக்கம் 19.

அர்மகெதோனுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் யாவை?

“இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று உலக அரசாங்கங்கள் பெரியளவில் அறிவிப்பார்கள். (1 தெ. 5:⁠3) அரசாங்கங்களின் பார்வை பொய் மதங்கள்மீது திரும்பும். (வெளி. 17:​15-18) யெகோவா தேவனை வணங்கும் மக்கள் தாக்கப்படுவார்கள். அப்போது முடிவு வரும்.​—⁠7/1, பக்கம் 9.

ஆபிரகாமின் நேச மகனை பலி செலுத்தும்படி யெகோவா ஏன் கேட்டார்?

ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் தயாராக இருந்தபோதிலும் யெகோவா அதைச் செய்ய விடவில்லை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தம் மகனை, இயேசுவைப் பலிகொடுப்பது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை நமக்குத் தத்ரூபமாக விளக்கவே ஆபிரகாமிடம் கடவுள் அப்படிக் கேட்டார்.​—⁠7/1, பக்கம் 20.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்