7 யோசேப்பு தன்னுடைய அண்ணன்களைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார். ஆனால், தான் யார் என்று காட்டிக்கொள்ளவே இல்லை.+ அவர்களிடம், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கடுகடுப்பாகக் கேட்டார். அதற்கு அவர்கள், “தானியம் வாங்குவதற்காக கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறோம்”+ என்று சொன்னார்கள்.