உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 25:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவருடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்குப் பக்கத்தில், ஏத்தியனான சோகாரின் மகன் எப்பெரோனுடைய நிலத்திலுள்ள மக்பேலா குகையில், அவரை அடக்கம் செய்தார்கள்.+ 10 அந்த நிலத்தை ஏத்தின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார். அவருடைய மனைவி சாராள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.+

  • ஆதியாகமம் 49:29-33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அதன்பின் அவர்களிடம், “நான் சீக்கிரத்தில் சாகப்போகிறேன்.*+ ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையில் என்னை அடக்கம் செய்யுங்கள். அங்குதான் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ 30 கானான் தேசத்தில் மம்ரேக்குப் பக்கத்திலே மக்பேலாவில் உள்ள நிலத்தில் அந்தக் குகை இருக்கிறது. ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் அந்த நிலத்தைக் கல்லறை நிலமாக விலைக்கு வாங்கினார். 31 அங்கேதான் ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் ஈசாக்கும்+ அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் லேயாளை நான் அடக்கம் செய்தேன்.+ 32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டன”+ என்று சொன்னார்.

      33 யாக்கோபு தன்னுடைய மகன்களுக்கு இந்த எல்லா அறிவுரைகளையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய கால்களைத் தூக்கிக் கட்டில்மேல் வைத்துப் படுத்தார். அதன்பின் இறந்துபோனார்.*+

  • ஆதியாகமம் 50:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவரை கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலா நிலத்திலிருந்த குகையில் அடக்கம் செய்தார்கள். அந்த நிலத்தை, அடக்கம் செய்வதற்கான நிலமாக ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார்.+ 14 யோசேப்பு தன்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு, தன்னுடைய சகோதரர்களோடும் மற்ற எல்லாரோடும் எகிப்துக்குத் திரும்பினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்