உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 13:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆபிராமிடமிருந்து லோத்து பிரிந்துபோன பின்பு யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார். 15 நீ பார்க்கும் எல்லா இடங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்.+

  • ஆதியாகமம் 26:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+ 4 நான் ஆபிரகாமிடம், ‘உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்.+ உன் சந்ததிக்கு இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’+ என்று சொன்னேன், அதன்படியே செய்வேன்.

  • உபாகமம் 34:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவா அவரிடம், “‘உன் சந்ததிக்குக் கொடுப்பேன்’+ என்று சொல்லி, ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசம் இதுதான். இதை உன் கண்களாலேயே பார்க்கும் பாக்கியத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேன், ஆனால் நீ அங்கு போக மாட்டாய்”+ என்று சொன்னார்.

  • அப்போஸ்தலர் 7:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், ஆபிரகாம் கல்தேயர்களுடைய தேசத்தைவிட்டு ஆரானில் குடியேறினார். அவருடைய அப்பா இறந்த பின்பு,+ நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்தத் தேசத்தில் கடவுள் அவரைக் குடியேற வைத்தார்.+ 5 இருந்தாலும், இங்கே அவருக்கு எந்தவொரு நிலத்தையும் சொத்தாகக் கொடுக்கவில்லை, ஓரடி நிலத்தைக்கூட கொடுக்கவில்லை; ஆனால் அவருக்குக் குழந்தை இல்லாதபோதே, இந்தத் தேசத்தை அவருக்கும் அவருக்குப் பிறகு அவருடைய சந்ததிக்கும் சொத்தாகக் கொடுக்கப்போவதாய் வாக்குறுதி தந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்