உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 17:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நான் உங்களோடு செய்கிற ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம்* செய்துகொள்ள வேண்டும். நீயும் உன் வருங்காலச் சந்ததியும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.+

  • ஆதியாகமம் 17:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அதன்பின், கடவுள் சொன்னபடியே+ ஆபிரகாம் தன் மகன் இஸ்மவேலுக்கும் தன் வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும் அதே நாளில் விருத்தசேதனம் செய்தார். அதாவது, தன் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும், தான் விலைக்கு வாங்கிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்தார்.

  • ஆதியாகமம் 22:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதனால், ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம்* வைத்தார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, தகன பலிக்கு வேண்டிய விறகுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்குப் புறப்பட்டுப் போனார்.

  • ஆதியாகமம் 22:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அப்போது அவர், “உன் மகனைக் கொன்றுவிடாதே, அவனுக்கு ஒன்றும் செய்துவிடாதே. நீ கடவுள்பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை”+ என்று சொன்னார்.

  • எபிரெயர் 11:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 விசுவாசத்தால்தான் ஆபிரகாம்,+ தனக்குச் சொத்தாகக் கிடைக்கவிருந்த இடத்துக்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, அந்த இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனார்.+

  • யாக்கோபு 2:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 நம் தகப்பனான ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின் மேல் படுக்க வைத்தபோது, செயல்களால்தானே நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்