-
ஆதியாகமம் 25:31-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 யாக்கோபு அவனிடம், “மூத்த மகனின் உரிமையை முதலில் எனக்கு விற்றுவிடு!”+ என்றான். 32 அதற்கு ஏசா, “நானே செத்துக்கொண்டிருக்கிறேன்! மூத்த மகனின் உரிமையை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன்?” என்றான். 33 “அப்படியானால், முதலில் நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு!” என்று யாக்கோபு கேட்டான். அதன்படியே, ஏசா சத்தியம் செய்து கொடுத்து, மூத்த மகனின் உரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.+
-
-
ரோமர் 9:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதுமட்டுமல்ல, நம்முடைய மூதாதையான ஈசாக்கின் மூலம் ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தபோது,+ 11 அதாவது இன்னும் அந்தக் குழந்தைகள் பிறக்காமலும் நல்லதோ கெட்டதோ செய்யாமலும் இருந்தபோது, “பெரியவன் சின்னவனுக்கு அடிமையாக இருப்பான்” என்று அவளிடம் சொல்லப்பட்டது.+ 12 “யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டும் இருக்கிறது.+
-