6 யோசேப்பு எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக இருந்தார்.+ அவர்தான் உலகத்திலிருந்த எல்லா ஜனங்களுக்கும் தானியம் விற்றுவந்தார்.+ அதனால், யோசேப்பின் அண்ணன்கள் அவரிடம் வந்து அவர்முன் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.+
9 அவர்களைப் பற்றிக் கனவு கண்டதை உடனே யோசேப்பு நினைத்துப் பார்த்தார்.+ பின்பு அவர்களிடம், “நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார்.