21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+
19 மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு தன்னுடைய கூட்டாளிகளை+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஒன்றுகூடி வரும்படி செய்தார். அப்போது, அங்கிருந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் யெகோவாவின் மகிமை தோன்றியது.+
5 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்;*+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.