உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 28:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு அவர், “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உன் அண்ணன் ஆரோனையும்+ அவனுடைய மகன்களான+ நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியவர்களையும் கூப்பிட்டுக்கொண்டு வா. அவர்கள் எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வார்கள்.+ 2 உன் சகோதரன் ஆரோனுக்கு மதிப்பும் அழகும்+ சேர்க்கிற பரிசுத்த உடைகளை நீ செய்ய வேண்டும். 3 நான் யாருக்கெல்லாம் ஞானமும் திறமையும் தந்திருக்கிறேனோ அவர்கள் எல்லாரிடமும் பேசி ஆரோனுக்காக உடைகளைச் செய்யச் சொல்.+ குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோன் புனிதமாக்கப்பட்டிருப்பதை அந்த உடைகள் காட்டும்.

  • யாத்திராகமம் 28:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 ஆரோனின் மகன்களுக்கு மதிப்பும் அழகும் சேர்க்கிற அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், முண்டாசுகளையும்கூட நீ செய்ய வேண்டும்.+

  • யாத்திராகமம் 28:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 ஆரோனும் அவனுடைய மகன்களும் சந்திப்புக் கூடாரத்துக்கு வரும்போதும், பரிசுத்த இடத்திலுள்ள பலிபீடத்தில் சேவை செய்ய வரும்போதும் அந்தக் கால்சட்டையைப் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தக் குற்றத்துக்காக அவர்கள் சாவார்கள். அவருக்கும் அவருடைய வருங்காலச் சந்ததிக்கும் இது நிரந்தரச் சட்டமாக இருக்கும்” என்றார்.

  • யாத்திராகமம் 40:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர்களுடைய அப்பாவை அபிஷேகம் செய்ததுபோல் அவர்களையும் அபிஷேகம் செய்.+ அப்போது, அவர்கள் எனக்குக் குருத்துவச் சேவை செய்வார்கள். அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அவர்களே நிரந்தரமாகக் குருத்துவச் சேவை செய்வார்கள்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்