8 அவர் அந்தச் சுருளை வாங்கியபோது, நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும்+ ஆட்டுக்குட்டியானவருக்கு முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாழையும், தூபப்பொருள் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள். அந்தத் தூபப்பொருள் பரிசுத்தவான்களின் ஜெபங்களைக் குறிக்கிறது.+