13 ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “நான் இஸ்ரவேலர்களிடம் போய், ‘உங்கள் முன்னோர்களின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல்லும்போது, ‘அவருடைய பெயர் என்ன?’+ என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்வது?” என்று கேட்டார்.
3 நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன்.+ ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப்+ பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.+